சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ’குட் பேட் அக்லி’ (Good Bad Ugly). உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைகிறார் என்ற அறிவிப்பே இப்படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இப்படத்தை பற்றிய தகவல்களும் அறிவிப்புகளும் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டின. படத்தின் டீசர் இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் பல மடங்கு அதிகரித்தது. ஆனாலும் படம் வெளியான முதல் காட்சியில் இருந்து அஜித் ரசிகர்களின் பாசிட்டிவ்வான விமர்சனங்களும் வரவேற்பும் படத்தை வெற்றியை உறுதி செய்து வருகின்றன.
படத்தில் கதை, திரைக்கதை என எதுவும் இல்லை என கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் 'குட் பேட் அக்லி' திரைப்படமானது தியேட்டரில் போய் ரசிகர்களுடன் பார்த்து கொண்டாட வேண்டிய திரைப்படம் என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் முழுக்க முழுக்க மாஸ் கமரஷியல் படத்தில் நடித்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Maamey, it’s a record-shattering opening 🔥
— raahul (@mynameisraahul) April 10, 2025
Extraordinary numbers.. Will share the exact figures tomorrow 💥#BlockbusterGBU
An @adhikravi sambavam
The Hit Machine @gvprakash musical #Ajithkumar sir @mythriofficial @tseries @sureshchandraa sir @trishtrashers mam…
படம் முழுக்க அஜித்தின் பழைய படங்கள் குறித்த வசனங்களும் காட்சிகளும் இருப்பதாகவும் அஜித்தின் தோற்றத்தை இவ்வளவு ஸ்டைலிஷாக சிறப்பாக யாரும் காட்டியத்தில்லை எனவும் முழுக்க முழுக்க அஜித் ஃபேன் பாய் சம்பவம் தான் 'குட் பேட் அக்லி’ என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 'குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.
சாக்னில்க் (Sacnilk) இணையதளத்தின்படி, 'குட் பேட் அக்லி’ திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் 28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. உலகளவில் 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாடு விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்கு முதல் நாளில் இதுவரை இருக்கும் சாதனைகளை உடைக்கும் அளவிற்கான தொடக்கம் கிடைத்துள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வமாக வசூல் விவரங்களை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ’விடாமுயற்சி’ திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் 26 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டு இதுவரை வெளியான தமிழ்ப்படங்களின் முதல் வசூலில் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வசூலே முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதனால் திரையரங்க உரிமையாளர்களும் வர்த்தக நிபுணர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குட் பேட் அக்லி திரைப்படமானது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடுவது தான் முன்பு திட்டமாக இருந்தது. ஆனால் அஜித்தின் மற்றொரு படமான ’விடாமுயற்சி’ மிக நீண்ட நாட்களாக பொங்கல் வெளியீட்டிற்கு திட்டமிட்டு வந்ததால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 25 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் தபு... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஒருவேளை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகியிருந்தால் இன்னும் அதிகமான வசூலை ஈட்டியிருக்கும் என கூறப்பட்டு வருகிறது. முன்பு வெளியான 'விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றியை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தொடர்ந்து திங்கள்கிழமை வரை விடுமுறை என்பதால் இந்த வசூல் இன்னும் அதிகமாகும் என கணிக்கப்படுகிறது.