ETV Bharat / entertainment

25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி... வைரலாகும் வீடியோ! - AJITH KUMAR AND SHALINI ANNIVERSARY

Ajith Kumar and Shalini Wedding Anniversary: தமிழ் சினிமாவிn நட்சத்திர ஜோடியான அஜித்குமார் – ஷாலினி தம்பதியினர் தங்கள் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் (@SureshChandraa X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 25, 2025 at 11:17 AM IST

2 Min Read

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’குட் பேட் அக்லி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது இத்திரைப்படம். படத்தின் வெற்றிக்கு இடையில் அஜித்குமார் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 ஐரோப்பா சீரிஸ் (GT4 European Series) கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அஜித்குமார் - ஷாலினி தம்பதியினர் தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அஜித்குமார் - ஷாலினி ஜோடி வாழ்த்துகள் கூறி வருகின்றனர். 1990களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் நடித்த பல்வேறு திரைப்படங்களின் வெற்றி அஜித்தை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இந்த ஆண்டு அஜித்தின் நடிப்பில் பிப்ரவரி மாதம் ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின் வெளியான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியில் ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.

தொடர்ந்து அவர் கார் ரேஸில் வெற்றி பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்களும் தொடர்ந்து கார் ரேஸ் மூலமாக ரசிகர்களிடையே உரையாடி வருகிறார் அஜித் குமார். இந்நிலையில் அஜித்குமார் - ஷாலினி தம்பதியினர் திருமண நாளைக் கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஷாலினி. அடுத்ததாக 1999ஆம் ஆண்டு வெளியான ’அமர்க்களம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். சரண் இயக்கததில் வெளியான இந்த படத்தில், ஜோடியாக நடித்த அஜித்தும் ஷாலினியும் காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படிங்க: கம்பேக் கொடுத்தாரா வடிவேலு? ஹாட்ரிக் அடித்தாரா சுந்தர்.சி?... ’கேங்கர்ஸ்’ பட விமர்சனம்

இத்திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். நேற்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர் அஜித்குமார் - ஷாலினி தம்பதியினர். இதனை இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவானது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நட்சத்திர தம்பதிக்கு, அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். திரைப்படம், கார் பந்தயம் என பிஸியாக இருந்து வந்தாலும் அஜித்குமார் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தக்கூடியவர் அஜித்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.