ஹைதராபாத்: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2, ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் சிகந்தர் (Sikandar) படத்திலும், விக்கி கௌஷல் நடிக்கும் சாவா (chhava) படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் தனுஷ், நாகார்ஜுனா நடிக்கும் குபேரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனக்கு விபத்து ஏற்பட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் எனது சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது.
ஏனென்றால் எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டது. டாக்டர்களின் அறிவுரைப்படி குணமாக வேண்டும் என்பதற்காக ஒரு மாதம் வீட்டில் ஓய்வில் இருந்தேன். நான் தற்போது குணமாகிவிட்டேன். நான் எனது வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறேன். அனைவரும் தங்களது நலனுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாழ்க்கை மிகவும் சிறியது. நாளை என்பது நிரந்தரமல்ல" என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "கணவராக 100 மார்க் மேல் தருவேன்"- வைரலாகும் ஆரத்தியின் வீடியோ! - Jayam Ravi and aarti divorce