ETV Bharat / entertainment

ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டினார்.. நடிகை பார்வதி நாயரின் உருக்கமான அறிக்கை! - parvati nair issue

நடிகை பார்வதி நாயரின் வீட்டில் வேலை செய்த சுபாஷ் என்பவர் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்புவதாகவும் நடிகை பார்வதி நாயர் அறிக்கை வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 11:03 PM IST

நடிகை பார்வதி நாயர்
நடிகை பார்வதி நாயர் (Credits - Parvati X Page)

சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் உத்தம வில்லன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் நடித்து வெளியான கோட் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், அவர் வீட்டில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை நடிகை பார்வதி நாயர் வீட்டில் வைத்து அடித்து துன்புறுத்தியதாக சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட சுபாஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ், இளங்கோவன், செந்தில் முருகன், அஜித் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் மூன்று பிரிவுகளில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : ’தளபதி 69’... ஆரம்பமே அமர்க்களம்... விஜய்யுடன் இணையும் பிரபல பாலிவுட் வில்லன்!

இந்நிலையில் நடிகை பார்வதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "என் அலுவலகத்தில் உதவியாளராக இருந்த சுபாஷ் என்பவர் தொடர்ந்து மிரட்டி என்னிடம் ரூ. 2 கோடி பணம் கேட்டு அவதூறு பரப்புகிறார். புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். உண்மையான அநீதிக்கு ஆளானவர்களைக் காக்கும் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார்.

நான் எந்த தவறும் செய்யாததால், அவர்களின் சட்ட விரோதமான கோரிக்கைகளை ஏற்க நான் தயாராக இல்லை. மேலும், என் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. சமீபத்தில் பல்வேறு யூடியூப் சேனல்களுக்குப் பல தவறான நேர்காணல்களை அளித்து, என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்னை வற்புறுத்தினார். மேலும், இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடக்கும் நிலையில் நீதி நிச்சயம் வெல்லும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.