சென்னை: நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒரு நிகழ்வில் நடிகை சாய் தன்ஷிகா இன்று அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா பிரபல நடிகரான விஷால், நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனக்கு திருமணம் நடைபெறும் என ஏற்கனவே கூறியிருந்தார். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படாத நிலையில் விரைவில் தனக்கு திருமணம் நடைபெறும் என விஷால் சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார்.
விஷால் யாரை திருணம் செய்து கொள்ள உள்ளார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்த நிலையில் நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ளதாக திரை உலகத்தினரிடையே பரபரப்பாக செய்திகள் உலா வந்தன. விஷால்-சாய் தன்ஷிகா திருமணம் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகி டா’ திரைப்பட நிகழ்ச்சியில் இன்று மாலை விஷால் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: சிறப்பு உணவு, சிறப்பு ட்ரோன் நிகழ்ச்சி... உலக அழகி போட்டியாளர்களை வியக்க வைத்த தெலங்கானா அரசு!
இந்நிலையில் இந்த விழாவின் போது பேசிய நடிகை சாய் தன்ஷிகா தனக்கு விஷாலுடன் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்டநாட்களாக விஷால் யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சாய் தன்ஷிகாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் விஷால், மற்றும் சாய் தன்ஷிகாவை அவர்களது சமூக ஊடக தளங்களில், சக நடிகர் , நடிகையர் மற்றும் இருவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஷால் நடித்த திரைப்படம் எதுவும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு படபிடிப்பு முடிந்தும் வெளியாகாமல் முடங்கி இருந்த 'மதகஜராஜா' திரைப்படம், தற்செயலாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியானது. பலரும் எதிர்பார்க்காத நிலையில் பொங்கலுக்கு வந்த திரைப்படங்களில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படமாக இந்தப் படம் அமைந்திருந்தது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.