சென்னை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான சச்சின் திரைப்படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ’சச்சின்’. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் அத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்ததது.
இந்நிலையில் ’சச்சின்’ திரைப்படத்தின் 20 ஆண்டுகள் நிறைவையொட்டி ஏப்ரல் 18ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்திருந்தார். மேலும் விஜய் அடுத்த ஆண்டுடன் திரைத்துறையில் இருந்து விலகுவதால் இத்திரைப்படத்தின் மறு வெளியீடு முக்கியத்துவம் பெற்றது.
’சச்சின்’ திரைப்படத்திற்கு புதிதாக வெளியாகும் திரைப்படத்தைப் போல பாடல்களையும் டிரெய்லரையும் இணையத்தில் வெளியிட்டார் கலைப்புலி தாணு. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் ’சச்சின்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இன்று திரையரங்குகளில் சச்சின் திரைப்படம் வெளியானதையொட்டி கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
சச்சின் " re-release"ல்
— Kalaippuli S Thanu (@theVcreations) April 17, 2025
சரித்திரம்,
சாதனை,
சகாப்தம்.
book my show: 59,000 டிக்கெட்டுகள் "sold out
பேராதரவை தந்த தளபதி ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
நாளை முதல் கோடை கொண்டாட்டம் ஆரம்பம்!
thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP @geneliad #Vadivelu @iamsanthanam… pic.twitter.com/Hti122zXSG
திரையரங்குகள் முழுக்க புது படத்தின் ரிலீஸைப் போல கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். சச்சின் திரைப்படம் தமிழகம் முழுவதும் 400க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படுகிறது. திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவே மற்ற மறு வெளியீட்டு படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ஏறக்குறைய இணையதளம் மூலம் மட்டும் 60,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலைப்புலி தாணு சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் சச்சின் திரைப்படம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளான இன்று சென்னையில் பல்வேறு திரையரங்குகளிலும் காட்சிகள் ஹவுஸ்புல்லாக இருப்பதாக இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவான பாடல்கள் இன்றளவும் இளைஞர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. திரையரங்குகளில் இப்பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுவெளியீட்டிற்கு ஏற்ற மாதிரி சச்சின் திரைப்படத்தின் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கமல்ஹாசன், சிம்பு குத்தாட்டம் போடும் ’தக் லைஃப்’ படத்தின் முதல் பாடல்!
மேலும் விஜய்யின் பெயர் வரக்கூடிய டைட்டில் கார்டு மற்றும் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஏற்றவாறு சில வசனங்களும் மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தாணு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆக்ஷன் கதையாக அல்லாமல் முழுக்க முழுக்க இரு கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் காதல் கதை தான் சச்சின். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
ஏறக்குறைய 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சச்சின் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விஜய்யின் பல்வேறு படங்களும் மறுவெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.