ETV Bharat / entertainment

'ஆண்டவன் அவதாரம்' அப்டேட் வந்தாச்சு.. இரட்டை வேடங்களில் களமிறங்கும் நட்டி நட்ராஜ்!

சாலை படத்தின் இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில், ஆண்டவன் அவதாரம் படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் இரு வேடங்களில் நடிக்கிறார் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நட்டி நட்ராஜன், நடிகர் ராவ்
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நட்டி நட்ராஜன், நடிகர் ராவ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 10:46 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனியிடம் பிடித்தவர் நடிகர் நட்டி நட்ராஜ். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் இந்தியில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் இவர் நடித்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம், இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ். இவர் தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் 'ஆண்டவன் அவதாரம்' என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இதில், நடிகர் ராகவ்-வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியது. தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

படம் குறித்து இயக்குநர் சார்லஸ் கூறும்போது, "இந்த படத்திற்கு 'அவதாரம்' என்று தான் டைட்டில் வைக்க விரும்பினேன். ஆனால் அது நாசரிடம் இருப்பதால், அவர்களது பெருமைக்குரிய படைப்பு என்பதால் அந்த டைட்டிலை தர அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால் 'ஆண்டவன் அவதாரம்' எனப் பெயர் சூட்டி படப்பிடிப்பை துவங்கியுள்ளோம்.

இதையும் படிங்க : 'வேட்டையன்' படத்தில் அரசு பள்ளி தொடர்பான காட்சிக்கு எதிர்ப்பு; படத்தை நிறுத்தக் கோரி போராட்டம்!

நடிகர் நட்டி இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அப்பா - மகன், அண்ணன் - தம்பி என்று வழக்கமான இரு வேடங்கள் போன்று இல்லாமல் யாரும் யூகிக்க முடியாதபடி உருவாக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இது ஒரு சயின்ஸ் ஃப்க்சன் படம் என்பதால் எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்களை விட இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சயின்ஸ் ஃப்க்சன் என்றாலும் எதிர்காலத்தில் நடப்பது போன்ற அல்லது நம்ப முடியாத விஷயங்கள் போல அல்லாமல் இன்று நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து இதை உருவாக்கி உள்ளோம். அதே சமயம் முழுக்க முழுக்க நகைச்சுவையும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தையும் ஒன்றாக இணைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் நட்டி இந்த கதையை கேட்டதுமே ரொம்பவே ஆர்வம் ஆகி விட்டார். என்னுடைய சொந்த தயாரிப்பில் இந்த படம் தயாரித்து இயக்குகிறேன் என்பதால் படம் தொடர்பான மற்ற பணிகளைத் தீவிரமாகக் கவனியுங்கள். என்னுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு இருக்கும். என்னைப் பற்றி, எனது சம்பளம், வசதிகள் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் இந்த படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று நட்டி உற்சாகம் கொடுத்தார்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.