தூத்துக்குடி: தமிழ் திரையுலகில் கதாநயாகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர் நந்தா. நடிகராக மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நந்தா சாமி தரிசனம் செய்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்து முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் (ஏப்ரல்.16) நடிகர் நந்தா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து சுப்ரமணிய சாமியை வழிபட்டார். கடந்த 2002ஆம் ஆண்டு அமீரின் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நந்தா. அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தை இன்றளவும் இணைய மீம்களில் பார்க்க முடியும்.
அதனைத் தொடர்ந்து ’புன்னகைப் பூவே’, ’கோடம்பாக்கம்’, ’ஈரம்’, ’அனந்தபுரத்து வீடு’ போன்ற முக்கியமான படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ’ஈரம்’ படத்தில் இவரது வில்லன் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிற ஒன்று.
கடைசியாக 2024ஆம் ஆண்டு வெளியான ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ’லத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
இதையும் படிங்க: ”இளையராஜா எதிர்பார்ப்பது பணம் இல்லை”... ’குட் பேட் அக்லி’ நோட்டீஸ் விவகாரத்தில் ’தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன் பதிவு!
இந்நிலையில் நடிகர் நந்தா அவரது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் மேற்கொள்ள இன்றூ 9ஏப்ரல்.16) வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி வித்யா ரூபா மற்றும் மகள் ஆகியோர் உடனிருந்தனர். அவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று முருகன், வள்ளி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி, தெட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கினர். தொடர்ந்து, நடிகர் நந்தாவுடன் பொதுமக்கள் செல்பி எடுத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.