சென்னை: தமிழ்நாடு காவல்துறையில், காலியாக உள்ள, 1,299 காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வருகிற மே 3 ஆம் தேதிக்குள் TNUSRB இணையதளம் www.tnusrb.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்:
பதவி | ஆண்கள் | பெண்கள் | காலியாக உள்ள மொத்த பணியிடங்கள் |
காவல்துறை உதவி ஆய்வாளர் (தாலுக்) | 654 | 279 | 933 |
காவல்துறை உதவி ஆய்வாளர் (ஏஆர்) | 255 | 111 | 366 |
மொத்தம் | 909 | 390 | 1,299 |
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 3 ஆகும். தொடர்ந்து, மே 13 ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பத்தைத் திருத்துவதற்கான கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் TNUSRB இணையதளம் www.tnusrb.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: உயருகிறதா தனியார் பள்ளிக் கட்டணம்! 1,000 பள்ளிகள் விண்ணப்பம்! |
கல்வித்தகுதி/வயது வரம்பு/ சம்பளம்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும், வருகிற ஜூலை 1 ஆம் தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.36,900 - 1,16,600 வரை
விண்ணப்பதாரர்கள் | வயது |
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (OBC, BC, MBC, DNC) | 32 |
எஸ்சி (SC), எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி (ST) | 35 |
திருநங்கை | 35 |
ஆதரவற்ற விதவை (Destitute Widow) | 37 |
முன்னாள் ராணுவ வீரர்கள், CAPF முன்னாள் பணியாளர்கள் | 47 |
துறைரீதியிலான ஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் | 47 |
தேர்வு முறை/விண்ணப்ப கட்டணம் :
தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு (Viva-Voce) ஆகிய முறையில் தேர்வுகள் நடத்தப்படும். இதில், பொது பிரிவிற்கு ரூ.500 மற்றும் துறைரீதியான விண்ணப்பங்களுக்கு ரூ.1,000 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்