ETV Bharat / education-and-career

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மறந்துராதீங்க..

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வானது ஜூலை 12ஆம் தேதி நடத்தப்பட உள்ள நிலையில் அவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (மே 24) கடை நாள்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2025 at 7:48 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளுக்கான 3,935 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே (மே 24) கடைசி நாளாகும்.

2018 முதல் 2025 வரை தொடர்ந்து 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-4 பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 3,935 இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பங்களை திருத்தம் செய்ய வேண்டுமானால், 29.05.2025 முதல் 31.05.2025 தேதி வரை செய்து கொள்ளலாம்.

கீழ்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு:

முக்கிய பணியிட பொறுப்புகள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை
வி.ஏ.ஓ 215
இளநிலை உதவியாளர்1678
இளநிலை வருவாய் ஆய்வாளர்239
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 01
தட்டச்சர் (டைப்பிஸ்ட்) 1099
வனக்காப்பாளர் 62

மொத்தம் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மே 24) கடைசி நாளாகும். இந்த தேர்வு 12.07.2025 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு முடிவுகளின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி கொடுக்காதது ஏன்? - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன விளக்கம்!

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வளவு தானா? அல்லது டிஎன்பிஎஸ்சி குறைவான இடங்களுக்கு மட்டுமே தற்போதை நிலையில் தேர்வு நடத்துகிறதா என்ற கேள்வியும் அவர்கள் எழுப்பியுள்ளனர். தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.