ETV Bharat / education-and-career

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு -ஜூன் 23ஆம் தேதிக்குள் விண்ணபிக்க அறிவுறுத்தல் - SPECIAL SUPPLEMENTARY EXAMINATION

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பட்டயத் தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இறுதிப் பருவம் அல்லது துணைத் தேர்வினை எழுதிய மாணவர்கள் நிலுவை வைத்துள்ள தேர்வுகளை ஜூலை மாதம் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வினை எழுதலாம்.

தொழில் நுட்ப கல்வி இயக்ககம்
தொழில் நுட்ப கல்வி இயக்ககம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 9, 2025 at 8:15 PM IST

2 Min Read

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், வாழ்வில் முன்னேற்றம் பெற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்துவது போல் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை
2025 சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வழக்கமாக ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் தான் பருவத்தேர்வுகள் நடைபெறும். ஆனால் முதல்முறையாக பாலிடெக்னிக் இறுதி பருவத் தேர்வினை எழுதிய மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2025 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம், துணைத்தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர். அந்த மாணவர்கள் உயர் கல்வி பயிலவோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.

துணைத் தேர்வு குறித்த விவரங்களை https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்த மாணவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட் ஜூன் 25ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: 4 ஆண்டு பொறியியல் படிப்புடன் ராணுவத்தில் வேலை! விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே... தவறவிடாதீர்கள்!

எழுத்து தேர்வுகள் ஜூன 30ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரையில் நடைபெறும். செய்முறைத் தேர்வுகள் ஜூலை 17 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ. 30 மற்றும் ஒரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் ரூ. 65 என செலுத்த வேண்டும்,"என்று கூறியுள்ளார்.

விண்ணப்பிக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பட்டயத் தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இறுதிப் பருவம் அல்லது துணைத் தேர்வினை எழுதிய மாணவர்கள் நிலுவை வைத்துள்ள தேர்வுகளை ஜூலை மாதம் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வினை எழுதலாம். இதற்கு https://dipexamstndte.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட https://dipexamstndte.in பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

சிறப்பு துணைத் தேர்விற்கான எழுத்துத் தேர்வுகளை தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிப்பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வினை எழுத வேண்டும். மாணவர்கள் தாங்கள் இறுதியாக படித்த பாலிடெக்னிக் கல்லூரியிலேயே தேர்வினை எழுதலாம். மேலும் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் dipexamstndte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.