ஹைதராபாத்: 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப நுழைவு திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்பவர்கள் தேர்வு செய்யப்படும்பட்சத்தில் நான்கு ஆண்டுகள் படிப்பு முடியும் வரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அதற்கான உறுதி மொழியும் அளிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பதினாறரை ஆண்டுகளுக்கு குறையாத வயது கொண்டவராகவும், பத்தொன்பதரை வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பம் செய்வோர் 2006 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. அதே போல 2008 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதக்கு அப்பால் பிறந்தவராகவும் இருக்கக் கூடாது.
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக அதற்கு இணையான தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோர் 2025 ஆம் ஆண்டில் ஜேஇஇ (மெயின்) தேர்வு எழுதியிருக்க வேண்டும். உடல் தகுதி மற்றும் மருத்துவ தகுதி உள்ளிட்டவற்றுக்கு https://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தை காணவும்.
இதையும் படிங்க: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆன்லைன் விண்ணப்பம் - 'முகவர்களை நம்பாதீர்கள்' என எச்சரிக்கை!
விண்ணப்பம் செய்வோர்களில் 90 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோர் நான்கு ஆண்டு கால படிப்பை படிக்க வேண்டும். வெற்றிகரமாக படிப்பை முடிப்பவர்களுக்கு ராணுவத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும். நான்கு ஆண்டுகள் முடிவில் பொறியியல் பட்டம் வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணமாக ரூ.13,940 வசூலிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நான்கு ஆண்டுகள் படிப்பு முடித்த பின்னர் உடற் தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் லெப்டினன்ட் ஆக நிலை 10ல் பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கான மாத சம்பளம் ரூ.56,100 வழங்கப்படும். https://joinindianarmy.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 12 ஆம் தேதி இரவு 12 மணி வரை மட்டுமே விண்ணபிக்க முடியும்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்