ETV Bharat / education-and-career

விமான நிலைய ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - AAI RECRUITMENT 2025

இந்திய விமான நிலைய ஆணையரகத்தில் உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமானம் படம்
விமானம் படம் (@aaichnairport)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 9, 2025 at 7:11 PM IST

1 Min Read

சென்னை: இந்திய விமான நிலைய ஆணையரகத்தில் (AAI) ஜூனியர் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு - Air traffic control) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வருகிற மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.

இது குறித்து, இந்திய விமான நிலைய ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது....

காலி பணியிடங்கள்:

"இந்திய விமான நிலைய ஆணையரகத்தில் (AAI) காலியாக உள்ள 309 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு - Air traffic control) காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இந்திய விமான நிலைய ஆணையரகத்தின் (AAI)-ன் இணைய தளமான www.aai.aero மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த முறையிலும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது.

இதில் இடஒதுக்கீடு இல்லாமல் 125 இடங்கள், எஸ்சி பிரிவில் 55 இடங்கள், எஸ்டி பிரிவில் 27 இடங்கள், ஒபிசி பிரிவில் 72 இடங்கள் என மொத்தம் 309 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

பணியின் பெயர்காலி பணியிடங்கள்பொது

பொருளாதாரத்தில்

பின்தங்கிய

உயர் சாதியினர்

இதர பிற்படுத்தப்பட்ட

பிரிவினர்

SCST
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் 309 12530725527

பணிக்கான தகுதிகள்:

ஜூனியர் எக்ஸிகியூட்டிவாக பணிபுரிவதற்கு, 10 அல்லது 12 ஆம் வகுப்பில் ஆங்கிலப் பாடப்பிரிவில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், BE, B-Tech, B.Sc இயற்பியல் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி பெற்று, அதிகபட்சம் 27 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும். ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். இதில் ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

இதையும் படிங்க: 8,997 சமையல் உதவியாளர்கள் பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 40,000 முதல் 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். அதாவது, இப் பதவிகளுக்கு தோராயமான CTC ஆண்டு வருமானம் ரூ. 13 லட்சம். தேர்வின் தற்காலிக தேதி (Computer Based Test) AAI-ன் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.aai.aero என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த வகையிலும் விண்ணப்பங்கள் பெறப்படாது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்ப முறைதொடக்க தேதிகடைசி தேதி
ஆன்லைன் ஏப்ரல் 25மே 24

இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்திய விமான நிலைய ஆணையரக இணையதளத்தில் ஆன்லைன் வழியாக தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.