சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.73,040-க்கும், கிராம் ரூ.9,130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மக்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் நாள்தோறும் ஏற்றஇறக்கத்தை கண்டு வருகிறது. ஆனால், சில நாட்களாவே தங்கத்தின் விலை ஏற்றத்தை மட்டுமே கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (ஜூன் 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.9,130-க்கும்; சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.73,040-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், பத்து நாட்களுக்கும் மேலாக, மாற்றம் இல்லாமல் இருந்து வந்த வெள்ளி விலை, ஜூன் 3-ஆம் தேதி இரண்டு ரூபாயும், ஜூன் 4-ஆம் தேதி ஒரு ரூபாயும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1,14,000-க்கும் விற்பனையானது. இன்று அந்த விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
- 1 கிராம் தங்கம் (22 காரட்) - ரூ.9,130
- 1 சவரன் தங்கம் (22 காரட்) - ரூ.73,040
- 1 கிராம் தங்கம் (24 காரட்) - ரூ.9,960
- 1 சவரன் தங்கம் (24 காரட்) - ரூ.79,680
- 1 கிராம் வெள்ளி - ரூ.114
- 1 கிலோ வெள்ளி - ரூ.1,14,000
கடந்த ஒரு வாரத்தில் 22 காரட் தங்கம் விலை நிலவரம்:
வ.எண் | தேதி | வித்தியாசம் | சவரன் விலை (ரூ) |
1 | ஜூன் 5 | ரூ.9,130 (+40) | ரூ.73,040 |
2 | ஜூன் 4 | ரூ.9,090 (+10) | ரூ.72,720 |
3 | ஜூன் 3 | ரூ.9,080 (+20) | ரூ.72,640 |
4 | ஜூன் 2 | ரூ.9,060 (+110) | ரூ.72,480 |
5 | ஜூன் 2 | ரூ.8,950 (+30) | ரூ.71,600 |
6 | ஜூன் 1 | ரூ.8,920 (0) | ரூ.71,360 |
7 | மே 31 | ரூ.8,920 (0) | ரூ.71,360 |
8 | மே 30 | ரூ.8,920 (+25) | ரூ.71,360 |
இதையும் படிங்க: சுசூகி இ-பைக் முதல் கவாசகி அரக்கன் வரை - ஜூன் 2025 களமிறங்க வரிசையில் நிற்கும் பைக்குகள்! |
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
ஜூன் ஐந்தாம் தேதியான இன்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும், எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50-க்கும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.