ETV Bharat / business

மளமளவென குறைந்த தங்கம் விலை... ஒரே நாளில் இவ்வளவு சரிவா? - TODAY GOLD RATE CHENNAI

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 28) சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.71,520-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் நகை (கோப்புப்படம்)
தங்கம் நகை (கோப்புப்படம்) (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 28, 2025 at 10:36 AM IST

Updated : April 28, 2025 at 12:55 PM IST

2 Min Read

சென்னை: சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. அதுவும் ஏப்ரல் மாதத்தின் பாதியில் 22 காரட் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை நெருங்கி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.65 குறைந்து, ரூ.8,940-க்கும்; சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520-க்கும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.

என்ன தான் தங்கத்தின் விலை குறைந்தது போன்று காணப்பட்டாலும், எப்போது வேண்டுமானும் அதிகரிக்கும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. அந்த அளவிற்கு இந்த வருடத்தில் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதற்கு ஏற்ப, தங்கத்தின் விலை விரைவில் லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 28):

  • 1 கிராம் தங்கம் (22 காரட்) - ரூ.8,940
  • 1 சவரன் தங்கம் (22 காரட்) - ரூ.71,520
  • 1 கிராம் தங்கம் (24 காரட்) - ரூ.9,753
  • 1 சவரன் தங்கம் (24 காரட்) - ரூ.78,024
  • 1 கிராம் வெள்ளி - ரூ.111
  • 1 கிலோ வெள்ளி - ரூ.1,11,000

கடந்த 10 நாட்களின் 22 காரட் தங்கம் விலை நிலவரம்:

வ.எண் தேதிவித்தியாசம்சவரன் விலை (ரூ)
1.ஏப்ரல் 28ரூ.8,940 (-65)ரூ.71,520
2.ஏப்ரல் 27ரூ.9,005 (0)ரூ.72,040
3.ஏப்ரல் 26ரூ.9,005 (0)ரூ.72,040
4.ஏப்ரல் 25ரூ.9,005 (0)ரூ.72,040
5.ஏப்ரல் 24ரூ.9,005 (-10) ரூ.72,040
6.ஏப்ரல் 23ரூ.9,015 (-275)ரூ.72,120
7.ஏப்ரல் 22ரூ.9,290 (+275)ரூ.74,320
8.ஏப்ரல் 21ரூ.9,015 (+70)ரூ.72,120
9.ஏப்ரல் 20ரூ.8,945 (0)ரூ.71,560
10.ஏப்ரல் 19ரூ.8,945 (0)ரூ.71,560
இதையும் படிங்க: சென்னை அருகே இந்தோ - தைவான் தொழிற்பூங்கா! இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா?

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை:

சென்னையில், ஏப்ரல் 28ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும், எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50-க்கும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒருவாரமாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

Last Updated : April 28, 2025 at 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.