சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.10 குறைந்து, ரூ.71,560-க்கும், கிராம் ரூ.8,945-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய மக்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ள தங்கம் விலை, நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதத் தொடக்கத்தில் மாற்றம் இல்லாமல் ஆரம்பித்த தங்கம் விலை, மளமளவென அதிகரித்து அதிர்ச்சியை அளித்தது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 7 ஆம் தேதி ரூ.1200 அதிரடியாக குறைந்த தங்கம், நேற்றும் குறைந்தது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (ஜூன் 10) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.8,945-க்கும்; சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.71,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1,19,000-க்கும் விற்பனையாகி வருகிறது. என்னதான் ஒருபுறம் தங்கம் விலை குறைந்தாலும், மறுபுறம் வெள்ளியின் விலை அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
- 1 கிராம் தங்கம் (22 காரட்) - ரூ.8,945
- 1 சவரன் தங்கம் (22 காரட்) - ரூ.71,560
- 1 கிராம் தங்கம் (24 காரட்) - ரூ.9,758
- 1 சவரன் தங்கம் (24 காரட்) - ரூ.78,064
- 1 கிராம் வெள்ளி - ரூ.119
- 1 கிலோ வெள்ளி - ரூ.1,19,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கம் விலை நிலவரம்:
வ.எண் | தேதி | வித்தியாசம் | சவரன் விலை (ரூ) |
1 | ஜூன் 10 | ரூ. 8,945 (-10) | ரூ.71,560 |
2 | ஜூன் 9 | ரூ.8,955 (-25) | ரூ.71,640 |
3 | ஜூன் 8 | ரூ.8,980 (0) | ரூ.71,840 |
4 | ஜூன் 7 | ரூ.8,980 (-150) | ரூ.71,840 |
5 | ஜூன் 6 | ரூ.9,130 (0) | ரூ.73,040 |
6 | ஜூன் 5 | ரூ.9,130 (+40) | ரூ.73,040 |
7 | ஜூன் 4 | ரூ.9,090 (+10) | ரூ.72,720 |
8 | ஜூன் 3 | ரூ.9,080 (+20) | ரூ.72,640 |
9 | ஜூன் 2 | ரூ.9,060 (+110) | ரூ.72,480 |
10 | ஜூன் 2 | ரூ.8,950 (+30) | ரூ.71,600 |
11 | ஜூன் 1 | ரூ.8,920 (0) | ரூ.71,360 |
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
ஜூன் பத்தாம் தேதியான இன்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும், எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50-க்கும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.