சென்னை: கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, திடீரென நான்கு நாட்களில் 2,500 ரூபாய் வரை சரிந்தது. தங்க விலை குறையத் தொடங்கிவிட்டது என நகைப் பிரியகளும், பொதுமக்களும் சற்று இளைபாறிய நிலையில், நேற்று (ஏப்ரல் 9) அதிரடியாக காலை, மாலை என இரு முறை உயர்ந்தது. இன்றும் ரூ.2,160 கூடியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் வரை ரூ.8,225-க்கு விற்பனையான தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் காலையில் ரூ.520-ம், மாலையில் ரூ.1480-ம் நகைப்பிரியர்கள் தலையில் பெரும் இடியை இறக்கியது என்றே கூறலாம். பொதுவாக, தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே அமைகிறது.
இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270-ம் உயர்ந்து, 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.294-ம், 18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.255-ம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
ஆகையால், தங்கம் விலை குறையும் போதே, நகையை வாங்கிக் கொள்ளுமாறும், விட்டால் இனி வாங்க முடியாத உச்சத்தை தங்கம் தொடும் வாய்ப்புள்ளதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று ஒரு சவரனுக்கு ரூ.2,160 அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 9):
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.8,560
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.68,480
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.9,338
- 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.74,704
- 1 கிராம் தங்கம் (18 கேரட்) - ரூ.7,090
- 1 சவரன் தங்கம் (18 கேரட்) - ரூ.56,720
- 1 கிராம் வெள்ளி - ரூ.104
- 1 கிலோ வெள்ளி - ரூ.1,04,000
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
வ.எண் | தேதி | தங்கம் விலை (22 K) |
1. | ஏப்ரல் 9 | ரூ.8,290 |
2. | ஏப்ரல் 8 | ரூ.8,225 |
3. | ஏப்ரல் 7 | ரூ.8,285 |
4. | ஏப்ரல் 6 | ரூ.8,310 |
5. | ஏப்ரல் 5 | ரூ.8,310 |
6. | ஏப்ரல் 4 | ரூ.8,400 |
7. | ஏப்ரல் 3 | ரூ.8,560 |
8. | ஏப்ரல் 2 | ரூ.8,510 |
9. | ஏப்ரல் 1 | ரூ.8,510 |
10. | மார்ச் 31 | ரூ.8,450 |
பெட்ரோல் டீசல் விலை:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.90.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.