சென்னை: கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று (ஏப்ரல் 16) அதிராடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூ.760 அதிகரித்து ரூ.70,520 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.95 உயர்ந்து ரூ.8,815-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. ஆனால், சமீபமாகத் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்தியாவில் முதலீடு செய்யும் மக்கள் தங்கம் போன்ற ஆபரணங்களை வாங்கி சேமிப்பது வழக்கம். இந்த நிலையில், 22 காரட் தங்கத்தின் உச்சம் நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில், இன்றைய நிலவரப்படி சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து 8,815-க்கும்; சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி கிராமுக்கு 0.20 பைசா உயர்ந்து, ரூ.110-க்கும், கிலோ ரூ.200 குறைந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 16):
- 1 கிராம் தங்கம் (22 காரட்) - ரூ.8,815
- 1 சவரன் தங்கம் (22 காரட்) - ரூ.70,520
- 1 கிராம் தங்கம் (24 காரட்) - ரூ.9,617
- 1 சவரன் தங்கம் (24 காரட்) - ரூ.76,936
- 1 கிராம் தங்கம் (18 காரட்) - ரூ.7,260
- 1 சவரன் தங்கம் (18 காரட்) - ரூ.58,080
- 1 கிராம் வெள்ளி - ரூ.110
- 1 கிலோ வெள்ளி - ரூ.1,10,000
கடந்த ஏழு நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
வ.எண் | தேதி | வித்தியாசம் | சவரன் விலை (ரூ) |
1. | ஏப்ரல் 16 | ரூ.8,815 (+95) | ரூ.70,520 |
2. | ஏப்ரல் 15 | ரூ.8,720 (-35) | ரூ.69,760 |
3. | ஏப்ரல் 14 | ரூ.8,755 (-15) | ரூ.70,040 |
4. | ஏப்ரல் 13 | ரூ.8,770 (0) | ரூ.70,160 |
5. | ஏப்ரல் 12 | ரூ.8,770 (+25) | ரூ.70,160 |
6. | ஏப்ரல் 11 | ரூ.8,745 (+185) | ரூ.69,960 |
7. | ஏப்ரல் 10 | ரூ.8,560 (+270) | ரூ.68,480 |
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கி: கடன்களுக்கு வட்டி குறைப்பு; அதேநேரம் சேமிப்புகளுக்கான வட்டியிலும் கை வைப்பு! |
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 -க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும், எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50-க்கும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.