சென்னை: கடந்த நான்கு நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்துள்ளது. அந்த வகையில், 22 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ.66,320ஆக சென்னையில் விற்பனையாகி வருகிறது.
சேமிப்பு என்றால் மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அசையா சொத்துக்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் தான். ஏனென்றால், நாளுக்கு நாள் உயரும் தங்கத்தில் சேமிப்பது, மக்களின் எதிர்கால தேவை மற்றும் அவசரத் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்திற்கான மதிப்பு எப்போதுமே குறையாமல் காணப்படும், ஏனென்றால் பெண்களுக்கு தங்கத்தின் மீது ஒரு இணைபிரியாத மோகம் இருக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தங்கம் அதிகம் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், விலை குறைவோ, ஏற்றமோ நகைக்கடைகளில் மட்டும் கூட்டம் குறையாமல் காணப்படும்.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை:
வ.எண் | தேதி | தங்கம் விலை (22 K) |
1. | ஏப்ரல் 8 | ரூ.8,225 |
2. | ஏப்ரல் 7 | ரூ.8,285 |
3. | ஏப்ரல் 6 | ரூ.8,310 |
4. | ஏப்ரல் 5 | ரூ.8,310 |
5. | ஏப்ரல் 4 | ரூ.8,400 |
6. | ஏப்ரல் 3 | ரூ.8,560 |
7. | ஏப்ரல் 2 | ரூ.8,510 |
8. | ஏப்ரல் 1 | ரூ.8,510 |
9. | மார்ச் 31 | ரூ.8,450 |
10. | மார்ச் 30 | ரூ.8,360 |
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.65,800க்கு விற்பனையான நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.66 ஆயிரத்து 320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65-ம், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.71-ம், 18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55-ம் அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 4 நாட்களாக மாற்றமில்லாமல் விற்பனையாகி வந்த வெள்ளி விலை ரூ.1 குறைந்துள்ளது.
இதையும் படிங்க: இன்றும் தங்கம் விலை குறையுமா? நகை வியாபாரிகள் கூறுவது என்ன? |
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 9):
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.8,290
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.66,320
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.9,044
- 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.72,352
- 1 கிராம் தங்கம் (18 கேரட்) - ரூ.6,835
- 1 சவரன் தங்கம் (18 கேரட்) - ரூ.54,680
- 1 கிராம் வெள்ளி - ரூ.102
- 1 கிலோ வெள்ளி - ரூ.1,02,000
பெட்ரோல் டீசல் விலை:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.61க்கும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.90.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.