ETV Bharat / business

"நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்...!" கண்ணீர் விட்டு கதறி அழும் மளிகைக் கடைகள்! - GROCERY STORES CLOSED

சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 5-ல் 1 மளிகைக் கடை மூடுவிழா கண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டப்பட்ட மளிகைக் கடை
பூட்டப்பட்ட மளிகைக் கடை (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 17, 2025 at 12:08 PM IST

Updated : March 17, 2025 at 12:40 PM IST

5 Min Read

- By சாலமன்

சென்னை: நாங்கள் மளிகைக் கடைகள் பேசுகிறோம்... எங்களைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்... உங்களது வீடுகளுக்கு அருகிலேயே எங்களைப் பார்த்திருப்பீர்கள்... எங்களிடம் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருப்பீர்கள்...

அன்பு ஸ்டோர்... ஆண்டவர் மளிகை... இப்ராஹிம் பலசரக்கு கடை...பிரான்சிஸ் ஸ்டோர்... இப்படி எத்தனையோ பெயர்களில் உங்களோடு பல ஆண்டுகளாக உறவாடி வருகிறோம். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தேவையான பிரட், ரஸ்க், இல்லத்தரசிகளுக்குத் தேவையான பவுடர், குளியல் சோப், பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களுக்கான நோட்டு, பென்சில், பேனா, ரப்பர், ஆண்களுக்குத் தேவையான பொருட்கள் என ஒரு வீட்டுக்கான இட்லி மாவு முதல் அனைத்து மளிகைப் பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். எங்களது பரப்பரளவு சிறிதாக இருந்தாலும், எங்களிடம் இல்லாத பொருட்களே இல்லை என அனைவரும் கூறுவார்கள்.

ஆனால், இப்போது எங்களது வியாபாரம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களில் பலர் இப்போது இல்லை. நாங்கள் இருந்த கடைகள் அடைக்கப்பட்டு இப்போது அங்கு 'To Let' வாசகம் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்த 'To Let' போர்டுகளுக்கு பின்னால் ஒளிந்திருப்பது எங்களது துயரமிகு கண்ணீர் கதைகள் என்றால் மிகையல்ல.

மளிகைக் கடை
மளிகைக் கடை (ETV Bharat Tamilnadu)

எங்களது வியாபாரம் சரிந்து விட்டதற்கு பல்வேறு காரணங்கள் பல்வேறு தரப்பினரால் கூறப்படுகிறது. தற்போது மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இது ஒருவகையில் உண்மை என்று நாங்கள் ஒப்புக் கொள்ளாமல் இல்லை. அதற்கு அவர்கள் வைக்கும் வாதம் என்ன தெரியுமா? மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு லிஸ்ட் தயார் செய்ய முடியாத நிலையில், நேராக சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று தேவையான பொருட்களை பார்த்துப் பார்த்து எடுத்துக் கொள்கிறோம் என்கின்றனர். கணவன் மனைவி என இருவரும் வேலைக்குச் செல்பவர்கள், வெளியே செல்ல நேரம் இல்லாமல் இருப்பவர்கள், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல விரும்புவோர் மால்களுக்குச் சென்று பெரிய கடைகளில் வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். வெளியே சென்றது போலவும் இருக்கும் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்கியது போலவும் இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவர்களைத் தவிர, வெளியே கடைக்குப் போவதற்கு நேரம் இல்லாதவர்களின் தேர்வு ஆன்லைன் ஷாப்பிங் என்று கூறுகின்றனர். இதனை நாங்களும் மறுக்கவில்லை. 24/7 புக்கிங், காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை டெலிவரி, அதிகப்படியான விலைத் தள்ளுபடி போன்றவற்றால் இவர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை தேர்வு செய்வதாகக் கூறுகின்றனர். ஆன்லைனில் கிடைக்கும், 24/7 புக்கிங், காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை டெலிவரி உள்ளிட்டவற்றை ஆண்டாண்டு காலமாகவே நாங்கள் கொடுத்து வருகிறோம். இன்றைய ஆன்லைன் வர்த்தகத்திற்கு இதனை அறிமுகப்படுத்தியே நாங்கள் தான். ஆனால், இது இப்போது பொதுமக்களிடம் எடுபடாது.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் நிவேதா (35). இவர் எங்களிடம் சிறு குழந்தையாக இருந்தது முதல் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால், சமீப காலமாக அவர் எங்களை ஏனோ புறக்கணித்துவிட்டார். இதற்கு அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? நீங்களே கேளுங்கள். "தினமும் மளிகைக் கடையில் பொருட்களை வாங்குவதை விட குறைந்த விலையில் ஆன்லைனில் வீட்டுக்கே வந்து கொடுப்பதால் அதை வாங்கிக் கொள்கிறேன். வீட்டில் குழந்தைகள் இருப்பதால் அவர்களை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியில் சென்று அடிக்கடி பொருட்களை வாங்க முடியவில்லை. கொரோனா காலத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கத் தொடங்கினேன். அதே பழக்கத்தில் தொடர்ந்து ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவை வாங்கி வருகிறோம். நாம் வீட்டில் இருக்கும் நேரத்திற்கு பொருட்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுவதால் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது மிக எளிமையாக உள்ளது" என்று கூறுகிறார்.

நிவேதா போல் நிறைய பேர் எங்களைப் புறக்கணித்து விட்டு ஆன்லைனில் மளிகைப் பொருட்களை வாங்கத் தொடங்கியதால், எங்களில் பலர் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதாவது 5-ல் 1 மளிகைக் கடை மூடப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோடம்பாக்கம் மண்டலத்தில் இருந்த 645 மளிகைக் கடைகளில் 199 கடைகள் கடந்த 5 ஆண்டுகளுக்குள் மூடப்பட்டுள்ளன. தேனாம்பேட்டை மண்டலத்தில் 695 மளிகை கடைகள் இருந்தன. அதில் 127 மளிகைக் கடைகள் மூடப்பட்டு விட்டன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வந்த 577 சூப்பர் மார்க்கெட்களில் 189 சூப்பர் மார்க்கெட்கள் இப்போது இல்லை" என்கிறார்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் மளிகைக் கடையை நடத்தி வருகிறார் பாண்டியன். அவர் கூறுகையில், "கடந்த 18 வருடங்களாக மளிகைக் கடை நடத்தி வருகிறேன். மளிகைக் கடை வருமானத்தின் மூலமாக குழந்தைகளை ஓரளவு படிக்க வைக்க முடிந்தது. கொரோனாவிற்கு பிறகு மளிகைக் கடையில் சரியாக வியாபாரம் இல்லை. தற்போது குடும்பத்தின் அத்தியாவசிய செலவுகளை பூர்த்தி செய்வதற்கே போராட வேண்டியதுள்ளது. வேறு தொழில் எதுவும் தெரியாததால் மளிகைக் கடையை தொடர்ந்து நடத்தி வருகிறேன். இதே நிலை நீடித்தால், கடையை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விடுவேன்" என்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போல் தான் இதுவும். இது கீழ்ப்பாக்கம் பாண்டியனின் வேதனை மட்டுமல்ல, இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மளிகைக்கடை உரிமையாளர்களின் வேதனை.

நிர்வாகிகளுடன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா - கோப்புப்படம்
நிர்வாகிகளுடன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

மளிகைக் கடைகள் மூடப்படுவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் ஈடிவி பாரத் செய்தியாளர் சாலமன் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு பதில் அளித்த விக்கிரமராஜா, "கொரோனா காலத்திற்கு பிறகு ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்தே சிறு வியாபாரிகள் தங்களுடைய கடைகளை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்துடன் அவர்களால் போட்டி போட முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் விலை வேறுபாடு. அதாவது உற்பத்தியாளர்கள் மூன்று கட்டங்களாக பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்கின்றனர். ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஒரு விலை, மொத்தமாக கொள்முதல் செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு ஒரு விலை மற்றும் சிறு கடைகளுக்கு ஒரு விலை என நிர்ணயித்து வியாபாரம் செய்து வருகின்றனர். அரசு இதை ஆய்வு செய்து இதற்கென்று ஒரு சட்டம் வகுக்கவில்லை என்றால் இன்னும் சில வருடங்களில் பல லட்சம் சிறு வியாபாரிகளின் கடைகள் காலி செய்யும் சூழல் ஏற்படும்.

மளிகைக் கடைகள் மூடப்படுவது சென்னையில் மட்டுமல்ல மற்ற பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் தற்போது இல்லை. நாம் சாலைகளில் செல்லும் போது கடை வாடகைக்கு என பல இடங்களில் பார்க்கிறோம். அதற்கு பின்னல் ஒரு பெரிய துயரச் செய்தி இருக்கிறது. நாம் குடியிருக்கும் பகுதியில் சொந்தமாக வீடு கட்டியவர்கள் சின்ன சின்ன கடைகளை கட்டி அதனை வாடகைக்கு விட்டு வருமானம் பெற்று வருகின்றனர். தற்போது அந்த சிறுகடைகள் காலி செய்யப்படுவதால் அவர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வருமானம் முற்றிலுமாக தடைப்பட்டு போனது. அதனால் அவர்கள் தங்கள் இருக்கக் கூடிய வீடுகளுக்கே வரி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகின்றனர். மேலும் அந்தக் கடையை நம்பி பணிபுரிந்தவர்களுக்கான வேலையும் இல்லாமல் போகிறது. இந்த நிலையை தமிழக அரசு கூர்ந்து கவனித்து அதை ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் பலமுறை அரசிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறோம். மே மாதம் நடைபெறும் எங்களுடைய மாநில மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள இருப்பதால் அவரிடம் நேரடியாக இந்த பிரச்சனைகளை எடுத்து வைக்க உள்ளோம்" என்று தெரிவித்து இருக்கிறார்.

ஒரு காலத்தில் வீடுகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தங்கு தடையின்றி வழங்கிக் கொண்டிருந்த நாங்கள், இப்போது வாடிக்கையாளர்கள் குறைந்து தவித்து வருகிறோம் என்று கண்ணீர் விட்டு கதறி அழுகின்றன நம்மிடம் இந்த கதையைச் சொல்லிய மளிகைக் கடைகள்.

ஆம்... நம்மால் பணம் கொடுக்க முடியாமல் இருந்த சில சமயங்களில் கடனுக்கு பொருட்களை பெற்றிருப்போம். நமது வீட்டு விஷேசங்களுக்கு முன் பணம் கொடுக்காமலே பொருட்களை வாங்கியிருப்போம். எத்தனையோ சமயங்களில் நமக்கு தோளோடு தோளாக நின்ற மளிகைக் கடைகளின் தற்போதைய நிலை உண்மையிலேயே வேதனையிலும் வேதனை தான்...

Last Updated : March 17, 2025 at 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.