சென்னை: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக அதிகரிகத்து வந்த தங்கத்தின் விலை, கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை 2,680 ரூபாய் வரை குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.65,800க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளின் தேவையைப் பொருத்தே அதன் விலை அதிகரிக்கும் என்பது வழக்கம். அதனடிப்படையில், இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கத்தின் தேவையானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வீட்டு விஷேசங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மூலதனமாக தங்கம் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மற்ற நாடுகள் டாலர் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கக் கூடிய சூழலில் இருப்பதால், டாலருக்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாடுமே தங்களுடைய வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் வைத்துக் கொள்வது வழக்கம். அந்த வழக்கத்தை மாற்ற சில நாடுகள் முயற்சி செய்வதால், தங்கத்தின் டிமாண்ட் அதிகரித்து வந்ததாகவும், தற்போது அவர்கள் முதலீட்டை நிறுத்தியுள்ளதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது போல என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க |
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 8):
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.8,225
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.65,800
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.8,973
- 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.71,784
- 1 கிராம் தங்கம் (18 கேரட்) - ரூ.6,780
- 1 சவரன் தங்கம் (18 கேரட்) - ரூ.54,240
- 1 கிராம் வெள்ளி - ரூ.103
- 1 கிலோ வெள்ளி - ரூ.1,03,000
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை:
வ.எண் | தேதி | தங்கம் விலை (22 K) |
1. | ஏப்ரல் 7 | ரூ.8,285 |
2. | ஏப்ரல் 6 | ரூ.8,310 |
3. | ஏப்ரல் 5 | ரூ.8,310 |
4. | ஏப்ரல் 4 | ரூ.8,400 |
5. | ஏப்ரல் 3 | ரூ.8,560 |
6. | ஏப்ரல் 2 | ரூ.8,510 |
7. | ஏப்ரல் 1 | ரூ.8,510 |
8. | மார்ச் 31 | ரூ.8,450 |
9. | மார்ச் 30 | ரூ.8,360 |
10. | மார்ச் 29 | ரூ.8,360 |
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 280-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.65,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக சரிந்து வரும் தங்கம் தற்போது வரை, ரூ.2,680 வரை குறைந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள், நகை முதலீட்டாளரக்ள் என அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.