சென்னை: தங்கம் விலையை பொறுத்த வரை சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளின் தேவையை பொறுத்தே அதன் விலை அதிகரிக்கும் என்பது வழக்கம். அதனடிப்படையில் இந்தியாவில் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தபடி வருகிறது. குறிப்பாக வீட்டு விசேஷங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மூலதனமாக தங்கம் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உலக பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டாலர் மீதான முதலீடு அதிகரிப்பு போன்வற்றால் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. ஆனால், இன்று தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.
இன்று (ஏப்ரல் 9) காலை நிலவரப்படி தங்கம் விலை நிலவரம்:
1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.8,290
1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.66,320
இன்று (ஏப்ரல் 9) காலை நிலவரப்படி வெள்ளி விலை நிலவரம்:
1 கிராம் வெள்ளி - ரூ.102
1 கிலோ வெள்ளி - ரூ.1,02,000
இந்த நிலையில், இன்று மாலை சந்தை நிறைவடையும் நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்தது.
இன்று (ஏப்ரல் 9) மாலை நிலவரப்படி தங்கம் விலை நிலவரம்:
1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.8,410
1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.67,280
இன்று (ஏப்ரல் 9) மதியம் நிலவரப்படி வெள்ளி விலை நிலவரம்:
1 கிராம் வெள்ளி - ரூ.104
1 கிலோ வெள்ளி - ரூ.1,04,000
நேற்றைய (ஏப்ரல் 8) நிலவரப்படி தங்கம் விலை நிலவரம்:
1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.8,225
1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.65,800
நேற்றைய (ஏப்ரல் 8) நிலவரப்படி வெள்ளி விலை நிலவரம்:
1 கிராம் வெள்ளி - ரூ.103
1 கிலோ வெள்ளி - ரூ.1,03,000
அதாவது இன்று மாலை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1480 உயர்ந்து ரூ.67,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 4 ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்தது. இதனால் பல தரப்பட்ட மக்களும் சற்று நிம்மதியடைந்தனர். இதை தொடர்ந்து மேலும் தங்கம் விலை குறையுமா? என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு எதிர் மாறாக 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக இன்று உயரத் தொடங்கி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்