ETV Bharat / business

எஸ்பிஐ வங்கி: கடன்களுக்கு வட்டி குறைப்பு; அதேநேரம் சேமிப்புகளுக்கான வட்டியிலும் கை வைப்பு! - BANKS INTEREST RATE 2025

எஸ்பிஐ தங்கள் வாடிக்கையாளர்கள் பெற்ற கடன்களுக்கான வட்டியைக் குறைத்திருக்கிறது.

வங்கிக்கடன் வட்டி - பிரதிநிதித்துவப் படம்
வங்கிக்கடன் வட்டி - பிரதிநிதித்துவப் படம் (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 15, 2025 at 10:50 AM IST

Updated : April 15, 2025 at 10:59 AM IST

2 Min Read

டெல்லி: நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி) தங்களிடம் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை குறைத்துள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 0.25 புள்ளிகளை குறைத்தது. அந்த அறிவிப்பின் விளைவாக புதிய வட்டி விகித குறைப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.

ரெப்போ உடன் இணைக்கப்பட்ட எஸ்பிஐ-யின் கடன் விகிதத்தில் (RLLR) 25 அடிப்படை புள்ளிகள் குறைந்து 8.25 விழுக்காடாக இருக்கிறது. இது பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதத்தையும் (EBLR) 8.65 விழுக்காடாக குறைத்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தங்கள் இணையதளத்தில், இன்றுமுதல் (ஏப்ரல் 15) புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்பு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியை குறைத்தது. அதன்படி, 6.25% இருந்த ரெப்போ வட்டியில், 0.25% குறைக்கப்பட்டு 6 விழுக்காடாக மாற்றப்பட்டது. நிதி நிலைமையை சீராக வைத்திருக்க எடுக்கப்பட்ட முடிவாக இது பார்க்கப்பட்டது.

அந்தவகையில், வங்கிகள் கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, எஸ்பிஐ வங்கி அந்த அறிவிப்பை வெளியிட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்துகிறது. அதேவேளை, வங்கிகளில் மேற்கொள்ளும் சேமிப்புகளுக்கான வட்டியின் அடிப்படை புள்ளிகள் 10 முதல் 25 என்ற அளவில் இன்றுமுதல் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக புதிய வட்டி விகிதத்தின்படி, ரூ.3 கோடி வரையிலான இரண்டு வருட கால அளவில் வைக்கப்படும் நிலையான வைப்பு நிதிகளுக்கு இனி 6.70% வட்டி வருவாய் மட்டுமே கிடைக்கும். இதுவே, மூன்று வருட கால அளவில் மேற்கொள்ளப்படும் வைப்பு நிதிகளுக்கு 7% ஆக இருந்த வட்டி வருவாய் இனி 6.90% ஆக இருக்கும். மேலும், வங்கிகளில் மேற்கொள்ளப்படும் சேமிப்புத் திட்டங்கள் அனைத்திற்குமான வட்டி வருவாய் குறைக்கப்படும்.

புதிய நடைமுறையின்படி 1-2 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் 7 விழுக்காட்டில் இருந்து 6.80% ஆகவும், 2-3 ஆண்டுகளுக்கு 7 விழுக்காட்டிலிருந்து 6.75% ஆகவும் இருக்கும்.

எஸ்பிஐ தனது புதிய அறிவிப்பில், 7.05 விழுக்காடு வட்டி விகிதத்தில் ‘444 நாட்கள்’ (அம்ரித் விருஷ்டி) என்ற குறிப்பிட்ட தவணைக்காலத் திட்டம் ஏப்ரல் 15, 2025 முதல் அமலுக்கு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி விகிதமும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க
  1. மிகவும் அவசியமாகி வரும் வட்டப் பொருளாதாரம்... ஏன்? எதற்கு?
  2. பின்வாங்கிய டிரம்ப்: சீனா தவிர பிற நாடுகளுக்கு பழைய 10% வரி தான்!
  3. தங்கம் விலை குறைந்தாலே பதறும் நகைப்பிரியர்கள்; ஏன் தெரியுமா?

இந்த சூழலில், எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) தங்களிடம் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வட்டியை குறைத்துள்ளது. இவர்கள் நிர்ணயம் செய்திருக்கும் 2.75% எனும் புதிய வரம்பே, தனியார் வங்கிகளை ஒப்பிடுகையில் குறைந்த சேமிப்புக் கணக்கு வட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சேமிப்புக் கணக்குகளில் 50 லட்சம் ரூபாய்-க்கும் அதிகமாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 3.5% வட்டிவிகிதம், தற்போது 3.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (BOI) கடன்கள் மீதான வட்டியை குறைத்த கையுடன், 7.3% வட்டி வருவாயை வழங்கும் 400 நாட்கள் சிறப்பு சேமிப்புத் திட்டத்தை ரத்து செய்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

Last Updated : April 15, 2025 at 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.