ETV Bharat / bharat

'எய்ம்ஸ்னா சும்மா இல்ல'.. திமுக, பாஜக எம்பிகளின் கேள்விக்கு ஜேபி நட்டா அளித்த பதில்! - JP Nadda on AIIMS

author img

By ANI

Published : Aug 2, 2024, 6:33 PM IST

JP Nadda respond to query on AIIMS: எய்ம்ஸ் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா, ஜார்கண்ட் மாநில பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா நீண்ட பதிலை அளித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் ஜேபி நட்டா
ஒன்றிய அமைச்சர் ஜேபி நட்டா (credit - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய விவாதத்தின்போது, திமுக எம்பி ஆ. ராசா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது ஆ.ராசா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி, மேற்கொண்டு எந்த பணிகளும் நடக்கவில்லை. மேலும், இந்த விவாதத்தில் மதுரை எய்ம்ஸ் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. இப்படி தமிழ்நாட்டையும், தமிழையும் நடத்துவது சரிதானா? என கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள கால தாமதத்தை ஏற்றுக்கொள்கிறோம். விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கும் என்றார்.

அதேபோல, ஜார்கண்ட் மாநில பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ''தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இருந்தாலும் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை வசதி மற்றும் மற்றும் அவசரகால சேவைகள் எப்போது தொடங்கும்'' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது ஜேபி நட்டா, எம்பி-யின் கவலைகள் தனக்குப் புரிகிறது என்றும், அவர் கேட்ட கேள்வி முக்கியமானது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, ''எய்ம்ஸ் பற்றிய எங்கள் பார்வை என்னவென்றால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் தங்கள் சிகிச்சைக்காக டெல்லிக்கு வர வேண்டியதில்லை. டெல்லியில் எய்ம்ஸ் வழங்கும் சேவையை அதே பிராண்ட் பெயரில் ஆங்காங்கே உள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அதற்காகவே உலகின் சிறந்த சுகாதார அமைப்புடன் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் 17க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க பிரதமர் மோடி முயற்சித்துள்ளார். 1950களில் எய்ம்ஸ் கொண்டு வரப்பட்டது. ஆனால், 1960 மற்றும் 1970களில் தான் அங்கீகாரம் பெற்றது.

நிறுவனங்கள் ஒரே நாளில் உருவாக்கப்படுவதில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை ஒருவர் திறக்க விரும்பினால், அதன் தர நிலைகள் மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்களும் பயிற்சி செய்கிறார்கள். ஆனால், எய்ம்ஸில் உள்ள மருத்துவர்கள் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சேவை செய்கின்றனர். ஒரு நோயாளிக்கு ஆகும் செலவின் அளவிலும் வித்தியாசம் உள்ளது.

எய்ம்ஸில் பணியாற்றும் அளவுக்கு சர்வதேச தரத்திலான பேராசிரியராக கிட்டத்தட்ட 10இல் இருந்து 15 ஆண்டுகள் ஆகும். 1960-70களில் வெளிநாடுகளில் இருப்பதை போல வசதிகள் இங்கில்லை என்று நம்முடைய தலைசிறந்த மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், இன்று உலகத்தரம் வாய்ந்த 22 நிறுவனங்களை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்'' என அமைச்சர் ஜேபி நட்டா இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க: “ராகுல் காந்தி தைத்த காலணியை பிரேம் செய்து வைப்பேன்”.. உ.பி. தொழிலாளி சுவாரஸ்ய பகிர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.