புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ச தித் திட்டம் வகுத்துக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தஹாவ்வூர் ராணாவிடம் தேசிய விசாரணை முகமை தினந்தோறும் விசாரணை நடத்த உள்ளது. தினந்தோறும் அவரிடம் 20 கேள்விகள் வரை கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசின் உளவுத்துறை, ரா உள்ளிட்ட அமைப்புகளும் ராணாவிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளன.
மும்பை தாக்குதல் வழக்கு:மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் அரபி கடல் வழியே மும்பையில் நுழைந்து சத்திரபதி சிவாஜி டெர்மினல், தாஜ் ஹோட்டல், ஒபராய் ஹோட்டல், யூத மையம் ஆகியவற்றில் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 60 மணி நேரமாக தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றது. மும்பை போலீசார், கமாண்டோ படையினர் உள்ளிட்டோர் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் ராணாவுக்கு எதிராக 405 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அமெரிக்காவில் சிறையில் இருந்த ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தனி விமானத்தில் அவர் டெல்லி அழைத்து வரப்பட்டார். அவர் இந்தியாவுக்கு வந்ததும் முறைப்படி அவரை தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று நள்ளிரவு என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ராணாவை அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அதன்படி 18 நாட்கள் காவலில் விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐஎஸ்ஐ அமைப்புக்கு உள்ள தொடர்புகள்: 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் தொடர்புடைய ராணாவிடம் விசாரணை நடத்துவதன் மூலம் குண்டு வெடிப்பு சதித்திட்டத்தில் மேலும் பல முக்கியத்தகவல்கள் கிடைக்கலாம் என்று என்ஐஏ அதிகாரிகள் கருதுகின்றனர். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பின் நேரடி தொடர்பு குறித்த கோணத்திலும் புதிய விஷயங்கள் தெரியவரும் என்றும் என்ஐஏ கருதுகிறது. லக்ஷர் இ தொய்பா அமைப்பில் தீவிர உறுப்பினராக ராணா இருந்தார். எனவே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கும், லக்ஷர் இ தொய்பா அமைப்புக்கும் உள்ள தொடர்புகளும் ராணாவுடனான விசாரணையில் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: ஓமன் டூ சென்னை! கேரள போலீசாரால் தேடப்பட்டவர் விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?
ராணா அடைக்கப்பட்டுள்ள 14க்கு 14 அறையில் 2 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒரு படுக்கை, ஒரு கழிவறை ஆகியவையும் உள்ளது. இந்த அறைக்கு அதி நவீன ஆயுதங்களுடன் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீர ர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த அறையை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணா இருக்கும் அறைக்குள் 12 அதிகாரிகள் மட்டும் சென்று வருவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணையை பதிவு செய்வதற்காக ஆடியோ பதிவு வசதியும் இருக்கிறது.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: முதல் நாளில் ராணாவிடம் என்ஐஏவின் கண்காணிப்பு அதிகாரி, துணை கண்காணிப்பு அதிகாரி பதவியில் உள்ளவர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தினசரி நடத்தும் விசாரணைகளை குறிப்பதற்காக ஒரு டயரி ஒன்று நிர்வகிக்கப்படுகிறது. "ராணாவிடம் இன்று காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கியது. விசாரணை தொடங்கியதில் இருந்தே எங்களுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை,"என்று அதிகாரிகள் கூறினர்.
"என்ஐஏ விசாரணை முடிவடைந்ததும், ஒருங்கிணைந்த தகவல்கள் அடங்கிய வழக்கின் டைரி தயாரிக்கப்பட்டு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்,"என்று அதிகாரிகள் கூறினர். விசாரணையின் போது முதலில் ராணாவின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப பின்னணி, கல்வி, வேலை ஆகிய தகவல்கள் கேட்கப்பட்டன. அடுத்த கட்டமாக ராணாவின் ஆலோசனை நிறுவனம், அதற்கு எங்கெல்லாம் கிளைகள் உள்ளன. மேலும் மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் கோல்மன் ஹெட்லி உடன் எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது. மேலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் உள்ள தொடர்பு என பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்