ETV Bharat / bharat

வக்ஃப் திருத்தச் சட்டம்: "அப்படி சொல்ல மம்தாவுக்கு உரிமை இல்லை"- மத்திய அமைச்சர் காட்டம்! - LAW MINISTER CRITICIZES MAMATA

மேற்குவங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உரிமை இல்லை என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியிருக்கிறார்.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 14, 2025 at 8:17 PM IST

2 Min Read

புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்தம் 8ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில் மேற்கு வங்கத்தில் அதனை அமல்படுத்தமாட்டோம் என சொல்வதற்கு அந்த மாநில முதல்வருக்கு உரிமை இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

வக்ஃப் (திருத்த) சட்டத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள சுடி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். வன்முறை நடைபெற்ற பகுதிகளில் இருந்து பலர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வன்முறை தொடர்பாக மேற்குவங்க போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். வன்முறை நடைபெற்ற பகுதிகளில் பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பிரிவு 163ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறை நடந்த பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. முர்ஷிதாபாத்தின் பல்வேறு பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சட்டத்துறை அமைச்சர் மேல்வால் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் ராம் மேக்வால், "மேற்குவங்க மாநிலத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உரிமை இல்லை.

இதையும் படிங்க: ‘தமிழே ஒளி’: புத்தாண்டில் தமிழுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த கெளரவம்!

குடியுரிமை (திருத்த) சட்டம் அமல்படுத்தப்படும்போதும் இதே கருத்தை மம்தா பானர்ஜி கூறினார். ஆனால், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வக்ஃப் (திருத்த) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அமல்படுத்தும்போது இதில் சிக்கல்கள் ஏதும் இருந்தால், விதிகளை நிர்ணயம் செய்யும் போது அது குறித்து ஆலோசனைகள் கூறலாம்,"என்றார்.

வக்ஃப் (திருத்த) சட்டம் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டது. இரு அவைகளிலும் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. எனினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இருந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு இந்த திருத்தச் சட்டத்தை எளிதாக நிறைவேற்றியது. இதற்கு கடந்த 5ஆம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். கடந்த 8ஆம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.