ETV Bharat / bharat

தீவிர அபிமானியின் 14 ஆண்டு கால சபதத்தை நிறைவேற்றிய பிரதமர் மோடி - ஹரியானாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! - PM MODI HELPS MAN TO PUT SHOE

மோடியை பிரதமராக சந்திக்கும் வரை காலணி அணியமாட்டேன் என்ற ஹரியானாவைச் சேர்ந்த தமது தீவிர அபிமானியின் 14 ஆண்டு கால சபதத்தை நிறைவேற்றியுள்ளார் மோடி. காலணியையும் பரிசாக அளித்து அவரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார் பிரதமர்.

கைதல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப்,பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ராம்பாலுக்கு புதிய காலணிகளை அணிய உதவினார்
கைதல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப்,பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ராம்பாலுக்கு புதிய காலணிகளை அணிய உதவினார் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 15, 2025 at 4:07 PM IST

3 Min Read

கைதல்: ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் காஷ்யப். இவர் குலாமாலி கிராமத்தில் ஒரு தொழிலாளியாக இருந்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது அவரை கண்டு அரசியல் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

அத்துடன் அப்போது அவர் ஒரு சபதம் எடுத்திருந்தார். நரேந்திர மோடியை பிரதமராக தான் நேரில் சந்திக்கும் வரை காலணி அணிவதில்லை என்பது தான் ராம்பால் எடுத்திருந்த சபதம். மழை, வெயிலுக்கு, காஷ்யப்பின் கால்கள் பழகி இருந்ததால் தனது சபதத்தில் அவர் உறுதியாக இருந்தார்.

சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ (x/ @narendramodi)

ராமாயணத்தில் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றாரோ, அதுபோன்று 14 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்த ராம்பால், அவர் அன்புடன் அளித்த காலணியை (ஷு) அணிந்து தமது தவத்தை முடித்துள்ளார்.

நெகிழ்வு சந்திப்பின் பின்னணி: ஹரியானா மாநிலம், ஹிசார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தின் திறப்பு விழா நேற்று (ஏப்ரல் 14) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், ஹிசாரில் இருந்து அயோத்திக்குச் செல்லும் முதல் விமானத்தின் பயணத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் யமுனா நகரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்தின் மூன்றாவது அலகுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஹிசார் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த கூட்டத்திற்கு வந்திருந்த கைதல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப்பை மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு நிகழ்வுதான் மோடியின் ஹரியானா வருகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஹரியானாவின் யமுனா நகரில் உள்ள கைத்தலைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் ஜியைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

இதையும் படிங்க: "இனிய நண்பர் விஜயகாந்த்.." தமிழில் புகழ்ந்த பிரதமர் மோடி; பாஜக கூட்டணியில் இணையும் தேமுதிக?

14 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பிரதமராகி அவரை சந்திக்கும் வரை காலணிகளை அணியமாட்டேன் என்று அவர் சபதம் எடுத்திருந்தார். அவருக்கு ஷூ அணிய உதவும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்தகைய உணர்வுகளை நான் மிகவும் மதிக்கிறேன். உங்களது அர்ப்பணிப்பை ஆதரிக்கிறேன். ஆனால் இந்த அர்ப்பணிப்பையும், ஆதரவையும் சமூக அல்லது தேசிய சேவை சார்ந்த செயல்களில் வெளிப்படுத்துவது மகிழ்ச்சிகரமான செயலாக இருக்கும்." என்று பிரதமர் மோடி தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியை சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் ராம்பால் காஷ்யப் பேசினார்.

அப்போது அவர், "2011 இல் மோடி குஜாத் முதலமைச்சராக இருந்தார். அப்போது நான் அவரது திறமை மற்றும் தலைமைத்துவத்தை பார்த்துதாண் அரசியலையே விரும்ப ஆரம்பித்தேன். இவர் நம் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வார் என நம்பினேன். அது நடந்துவிட்டது; நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

இந்திய அரசியல் குறித்து எனது நண்பருடன் 2011ஆம் ஆண்டு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பிரதமர் பதவி குறித்து கருத்து தெரிவிக்கும்போது நான் அடுத்த பிரதரமாக மோடி ஆவார் என அப்போது இந்த சபத்ததை போட்டேன். கடந்த 14 ஆண்டுகளாக வெயில், மழை என அனைத்து காலங்களிலும், எந்த சூழலிலும் காலணி அணியாமலேயே வெற்று கால்களுடனே எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து வந்தேன். நான் சபதம் போட்டு 4 ஆண்டுகளில் பிரதமரானார் மோடி. அப்போது எல்லோரும் சபதத்தை முடித்துக் கொள்ள கூறினார்கள். ஆனால், 'எனது பாதி சபதம்தான் முடிந்துள்ளது. அவர் (மோடி) என்னை சந்தித்தால்தான் எனது சபதம் முழுமையாக நிறைவு பெறும்' என்று உறுதியாக கூறினேன். நேற்றுடன் எனது சபதம் நிறைவடைந்துள்ளது.

பிரதமர் மோடியை நான் சந்தித்தபோது அவர் எனது சபதம் குறித்து கேட்டார். 'முதலில் உங்களது உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற சபதம் இனி போடாதீர்கள். இந்த முறை நான் உங்களுக்கு ஷூ அணிவித்து உங்களின் சபதத்தை முடித்து வைக்கிறேன்'என்று மோடி கூறியதாக உணர்ச்சிப் பொங்க தெரிவித்தார் ராம்பால் காஷ்யப்

பிரதமர் மோடியின் கைகளால் காலணியை பரிசாக பெற்ற முதல் நபர் என்ற பெருமையை ராம்பால் காஷ்ப் பெற்றுள்ளார். அத்துடன் மோடி பரிசளித்த ஷுவை அவர் அணிய முயன்றபோது அவருக்கு பிரதமர் உதவும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.