புதுடெல்லி: இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற தலைவரான மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு புதன் கிழமையன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தமது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "உண்மை, நல்லிணக்கம், சம உரிமை ஆகிய லட்சியங்களின் அடிப்படையில் அமைந்த மரியாதைக்குரிய மகாத்மா காந்தியின் வாழ்க்கை, லட்சியங்கள் எப்போதுமே நாடின் மக்களால் ஈர்க்கக் கூடியவை. தேசந்தின் தந்தையாக உருவெடுத்த காந்தி, உண்மை, அகிம்சை ஆகிய கொள்கைளின் அடிப்படையில் என்னென்றும் பின்பற்றக்கூடியவர், உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளை பல தலைமுறைகளாக ஈர்த்து வருபவர்," என்று கூறியுள்ளார்.
सभी देशवासियों की ओर से पूज्य बापू को उनकी जन्म-जयंती पर शत-शत नमन। सत्य, सद्भाव और समानता पर आधारित उनका जीवन और आदर्श देशवासियों के लिए सदैव प्रेरणापुंज बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 2, 2024
இதுதவிர நாட்டின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நாட்டின் வீர்கள், விவசாயிகள் ஆகியோரின் பெருமைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர் லால்பகதூர் சாஸ்திரி. ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்ற கோஷத்தை எழுப்பியவர். அவரது எளிமை மற்றும் நேர்மை பரந்த அளவில் மரியாதையுடன் நினைவு கூரப்படுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
देश के जवान, किसान और स्वाभिमान के लिए अपना जीवन समर्पित करने वाले पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री जी को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि।
— Narendra Modi (@narendramodi) October 2, 2024
இதையும் படிங்க: நான்தான் காந்தி..! நான்தான் சுபாஸ்..! - சுதந்திர தின மாறுவேடப் போட்டியில் கலக்கிய சிறுவர்கள்!
இதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் பத்தாவது ஆண்டு தூய்மை இந்தியா இயக்கத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டார். நாட்டு மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தூய்மை பணியில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இது போன்ற முயற்சிகள் தூய்மை இந்தியா உருவாக்குவதற்கு வலு சேர்க்கும் என்றும் பிரதமர் கூறினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாட்டு மக்களின் சார்பில் தேசதந்தை மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு என்னுடைய மரியாதையை செலுத்தினேன்," என்று கூறியுள்ளார்.
राष्ट्रपिता महात्मा गांधी की 155वीं जयंती के अवसर पर मैं सभी देशवासियों की ओर से उनको विनम्र श्रद्धांजलि अर्पित करती हूं। pic.twitter.com/97TPrDYQQc
— President of India (@rashtrapatibhvn) October 2, 2024
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு எக்ஸ் பதிவில், "சாஸ்திரி தனது வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை மற்றும் தேசபக்தியின் உயர்ந்த கொள்கைகளை முன்வைத்தார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினேன்," என்று தெரிவித்துள்ளார்.
पूर्व प्रधानमंत्री श्री लाल बहादुर शास्त्री जी की जयंती पर, मैं उनको विनम्र श्रद्धांजलि अर्पित करती हूं। शास्त्री जी ने आजीवन सादगी, ईमानदारी और देशभक्ति के उच्चतम आदर्श प्रस्तुत किए। उनके सुदृढ़ नेतृत्व में भारत ने आर्थिक, सामरिक एवं अन्य सफलताएं प्राप्त की। आइए, उनके जीवन से…
— President of India (@rashtrapatibhvn) October 2, 2024