புதுடெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு வரும் 15 ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஒரே ஷிப்டில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து தேசிய தேர்வுகள் முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
'நீட்' எனப்படும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு வருகிற 15 ஆம் தேதி நடைபெறும் என்று, அறிவிக்கப்பட்டு இருந்தது. நீட் முதுநிலை தேர்வை 242678 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு 2 ஷிப்டுகளாக நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மருத்துவ வாரியம் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், ஒரே ஷிப்ட்டில் தேர்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: பூச்சி கடிக்கு சிகிச்சை பெற்ற சிறுவன் உயிரிழப்பு; அரசு மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்!
இந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி 2 கட்டங்களாக நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு மையங்களில் உள்கட்டமைப்பு வசதி செய்து, ஒரே ஷிப்டில் தேர்வு நடத்த கால அவகாசம் தேவை என்பதால் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை கூறியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.