ETV Bharat / bharat

பாகிஸ்தான் முகத்திரையை கிழிக்க வெளிநாடு செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு; முழு விவரம்! - INDIAN MPS TEAM

பாகிஸ்தான் பயங்கரவாத முகத்தை உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்தியா சார்பில் பல்வேறு நாடுகளுக்கு சென்று பரப்புரை மேற்கொள்ள இருக்கும் எம்.பிக்கள் கொண்ட 7 குழுக்களின் விவரம் வெளியாகி இருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் (@adgpi)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2025 at 9:19 PM IST

3 Min Read

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பெஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவிற்கு எதிராக இயங்கி வந்த பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா ட்ரோன்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பெரிய அளவுக்கு பாதிப்பை சந்தித்த நிலையில், கடந்த மே 10 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் எனவே பாகிஸ்தான் நாட்டின் உண்மையான பயங்கரவாத முகத்தினை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.

இதனை முன்னிட்டு, பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருக்கும் முக்கிய கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கூட்டு தீர்மானத்தை பிரதிபலிக்கும் விதமாக, அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்கள் விரைவில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பல்வேறு நாடுகளுக்கு சென்று எடுத்துரைக்க உள்ளனர்.

இந்த நிலையில் (நேற்று மே 17) வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கும் குழுவில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் பட்டியலை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்.

முதல் குழு:

பாஜக எம்.பி பைஜெயந்த் பாண்டா தலைமையில் பாஜகவை சேர்ந்த எம்.பிக்களான நிஷிகாந்த் துபே, பன்னான் கோன்யாக், ரேகா சர்மா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி அசாதுதீன் ஓவைசி, சத்னம் சிங்க சன்து, குலாம் நபி ஆசாத், ஹர்ஷ் ஸ்ரிங்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

இரண்டாவது குழு:

பாஜக எம்.பி ரவி சங்கர் பிரசாத் தலைமையில் டகுபதி புரண்டேஸ்வரி, சிவசேனா (உத்தவ் அணி) பிரியங்கா சதர்வேதி, குலாம் அலி காத்னா, காங்கிரஸ் அமர் சிங், பாஜகவின் சாமிக் பட்டாச்சாரியா, எம்ஜே அக்பர், பங்கஜ் சரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐநா, இத்தாலி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

மூன்றாவது குழு:

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்.பியான சஞ்சய் குமார் ஷா தலைமையில் பாஜக எம்.பிக்களான அபராஜிதா சாரங்கி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி யூசுப் பதான், பிரிஜ் லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டஸ், பிரதான் பாரோ, ஹேமங் ஜோஷி, காங்கிரஸின் சல்மான் குர்ஷித், மோகன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

நான்காவது குழு:

சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக எம்.பிக்களான பன்சுரி ஸ்வராஜ், ஐயூஎம்எல் கட்சியின் முகமது பஷீர், அதுல் கார்க், பிஜேடி கட்சியின் எம்பி சஸ்மித் பாத்ரா, மன்னன் குமார் மிஸ்ரா, எஸ்எஸ் அகுல் வாலியா, சுஜான் சினோய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபேரியா, காங்கோ, சியாரா, லியோன் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ஐந்தாவது குழு:

காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் எம்.பி தலைமையில் எல்ஜேபி (ராம்விலாஸ்) கட்சியின் எம்.பி ஷாம்பவி, ஜேஎம்எம் கட்சியின் சர்பாராஸ் அகமது, தெலுங்கு தேசம் கட்சியின் ஹரிஷ் பாலயோகி, பாஜக எம்.பிக்களான ஷஷாங்க்மணி திரிபாதி, புவனேஸ்வர் காலிதா, சிவசேனா கட்சியின் மிலின்ட் முர்ளி தியோரா, தேஜஸ்வி சூர்யா, தாரன்ஜித் சிங் சன்டு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

இதையும் படிங்க: "டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரிக்க தனி கமிஷன்" - மத்திய அரசுக்கு கிருஷ்ணசாமி பரபரப்பு கோரிக்கை!

ஆறாவது குழு:

திமுக எம்.பி கனிமொழி தலைமையில் சமாஜ்வாதி எம்.பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்.பி பிரிஜேஷ் சவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சியின் அசோக் குமார் மிட்டல், மங்சீவ் எஸ் பூரி, ஜாவீது அஷ்ரப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஸ்பெயின், கிரீஷ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ஏழாவது குழு:

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) எம்.பி சுப்ரியா சூலே தலைமையில் பாஜக எம்.பி ராஜீவ் பிரதாப் ரூடி, ஆம்ஆத்மி கட்சியின் விக்ரம்ஜித் சிங் சகானி, காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி, அனுராக் சிங் தாகூர், தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீ கிருஷ்ணா தேவராயலு, ஆனந்த் சர்மா, முரளிதரன், சையத் அக்பருதீன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.