காஷ்மீர்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, செனாப் பாலத்தை ரயில் கடக்கும் போது சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா இன்று காஷ்மீரின் நௌகாம் ரயில் நிலையத்திலிருந்து கத்ரா வரை வந்தே பாரத் ரயிலில் பயணித்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ரயிலில் பயணித்த அவர், செனாப் பாலத்தை கடக்கு போது மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்ததது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீரை முழு நாட்டுடன் இணைக்கும் நாளுக்காக நாங்கள் பல வருடங்களாக காத்திருந்தோம். அது தற்போது நிறைவேறியுள்ளது. செனாப் பாலம் காஷ்மீர் மக்களுக்கு கிடைத்த பரிசு. இதை கட்ட உதவியாக இருந்த தொழிலாளர்கள் மற்றும் பொறியியல் வல்லுநர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லாமல் இந்த திட்டம் சாத்தியமாகி இருக்காது.
இந்த ரயில் காஷ்மீரின் சுற்றுலாவை மட்டுமல்லாது, வர்த்தகத்தையும் அதிகரிக்கும். காஷ்மீர் மக்களின் தயாரிப்புக்கள் இனி கொல்கத்தா, மும்பை, பாட்னா, கன்னியாகுமரி வரை தங்கு தடையின்றி செல்லும். என்றாவது ஒருநாள் ஜம்மு காஷ்மீர் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும் என்ற எங்களின் கனவு இந்த பாலத்தின் வழியாக நிறைவேறியுள்ளது.
#WATCH | Katra, J&K: " mata ne bulaya hai. aaya hai bulawa shera wali ka" says national conference chief farooq abdullah as he reaches shri mata vaishno devi katra railway station on the vande bharat train from nowgam railway station pic.twitter.com/jnyLQDqEtc
— ANI (@ANI) June 10, 2025
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல்: திமுக, அதிமுக, மநீம வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு! 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்! |
இந்த திட்டம் நீண்ட காலமாக செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில், அதை பிரதமர் மோடி முழுவதுமாக நிறைவேற்றி திறந்து வைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த திட்டத்தில் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் பங்களித்துள்ளார். குறிப்பாக, காஷ்மீருக்கு ரயிலில் வர வேண்டும் என்று மறைந்த பிரதமர் வாஜ்பாய் கனவு கண்டார். இது தற்போது நிறைவேறியுள்ளது. இந்த பாலத்தால் பொதுமக்கள் காஷ்மீரின் முக்கிய பகுதிகளுக்கு எளிதாக சென்று வர இயலும். சுற்றுலாத் துறை கண்டிப்பாக அடுத்தகட்ட வளர்ச்சி அடையும்" என்றார்.
முன்னதாக, கடந்த வெள்ளியன்று ஜம்மு காஷ்மீரில் ரூ.46,000 கோடி மதிப்பில் உருவான செனாப் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது உலகின் மிக உயரமான வளைவு பாலம் என்ற சிறப்பை தன்னகத்தை உடையது. செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில், 1,315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம், அதிக நில அதிர்வு மற்றும் காற்றைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையிலான பயண நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குறைக்கும்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.