ETV Bharat / bharat

''இந்தியாவில் பரவும் கொரோனா திரிபு ஆபத்தானதா?" - பிரபல சுகாதார நிபுணர்கள் சொல்வது இது தான்! - CORONA NEW VARIANT

இந்தியாவில் கொரோனா திரிபு பரவி வரும் நிலையில் இந்த வகை தொற்று மக்களுக்கு ஆபத்தானதா? என்பது குறித்து பிரபல சுகாதார நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கோவிட் 19 பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைகிறார்
கலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கோவிட் 19 பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைகிறார் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2025 at 9:04 PM IST

4 Min Read

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி முதல் கடந்த 2023 ஆம் ஆண்டு வரை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வந்தாலும் தீவிர பாதிப்பாக இதுவரை மாறவில்லை.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா நோய் பாதிப்பு நாடு முழுவதும் சற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகரித்து வரும் கோரோனா பாதிப்பை தொடர்ந்து காஜியாபாத் மற்றும் டெல்லியைச் சேர்ந்த நிபுணர்கள், ''தற்போதைய திரிபு கடுமையான மருத்துவ சிக்கல்களை ஏற்படுத்தாததால் மக்கள் பீதி அடைய வேண்டாம்'' என்று அறிவுறுத்தி உள்ளனர்.

நேற்று (மே 23) காசியாபாத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதாரத் துறை நோயாளிகளின் நிலைமை மற்றும் மருத்துவ சிகிச்சைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எனவே யாரும் பீதி அடைய தேவையில்லை என்றும், 4 நோயாளிகளும் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 3 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் சுகாதாரத் துறை நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கொரோனா ஜேஎன் 1 அறிகுறிகள்:

இதுகுறித்து காசியாபாத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அகிலேஷ் மோகன் கூறும்போது, ''மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் தவிர வேறு எந்த மருத்துவ சிக்கல்களும் இல்லை. பொதுவாகவே வானிலை மாறும் போது, வைரஸ் தொற்றுகள் அதிகரிக்கும். எனவே எந்த வகையிலும் பீதி அடையத் தேவையில்லை. இருமல், சளி மற்றும் காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள வேறு யாருக்கும் தொற்று பரவாமல் இருக்க சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்றின் கடைசி திரிபு ஓமிக்ரான். இது முந்தைய திரிபுடன் ஒப்பிடும்போது ஆபத்தானது அல்ல. இருப்பினும், சுகாதார துறை முழுமையாக விழிப்புடன் உள்ளது. கொரோனா பாதிப்பு பதிவானால் மாவட்டத்தின் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் நோயியல் ஆய்வகங்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஐடிஎஸ்பி போர்ட்டலில் அதை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மேலும் வழக்குகள் பதிவானால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய திரிபு வகையின் நிலை:

கொரோனா ஜே.என் 1 திரிபு வேகமாக பரவும் திறனை கொண்டது. இது, ஓமிக்ரானின் துணை திரிபாகவும் விவரிக்கப்படுகிறது. இந்த திரிபின் அறிகுறிகளில் இருமல், சளி, காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, தலைவலி மற்றும் வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை அடங்கும். அதே சமயம் கொரோனா தொற்றின் இந்த திரிபு ஒரு தொற்றும் நோய். ஆனால் தீவிரம் மிகவும் குறைவு. பாதிக்கப்படும் நபர் வீட்டு தனிமைப்படுத்தலில் குணமடைவார். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை.

நடப்பு 2025 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஜே.என் 1 திரிபு தொற்று மொத்தம் 300 பேருக்கு பதிவாகியுள்ளது. ஆனாலும் இந்த தொற்று திரிபால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும், இதுவரை இறந்ததாக எந்த செய்தியும் இல்லை. கிட்டத்தட்ட அனைத்து நோய் பாதிப்பும் லேசானவை என்பதால் பீதி அடைய தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எந்த நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. தற்போது நாட்டின் பல மாநிலங்களில் இந்த புதிய திரிபின் எண்ணிக்கை பதிவாகியுள்ளன. ஆனாலும், பதிவான தொற்று எண்ணிக்கை நாட்டினுடைய மக்கள்தொகையின் அடிப்படையில் மிகக் குறைவு. எனவே கவலைப்படவோ, பீதியடையவோ தேவையில்லை.

இதையும் படிங்க: ''புகையிலை இல்லா கல்வி வளாகங்கள்" - விழிப்புணர்வு இயக்கம் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

இதற்கிடையே டெல்லியில் உள்ள மருத்துவர்கள் இந்த கொரோனா திரிபு கடுமையானது அல்ல என்றும் பெரும்பாலான நோயாளிகள் லேசான அறிகுறிகளை மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர். டெல்லியில் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 23 நோயாளிகளும் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தனர் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தனர் என்று டெல்லி அரசாங்கத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் 22 பேர் வீட்டிலேயே குணமடைந்தனர். யாருக்கும் மருத்துவமனையில் அனுமதி தேவையில்லை." என்று கூறினார்.

மக்கள் பீதி அடைய தேவையில்லை:

இது குறித்து இந்திய மருத்துவ சங்க ஜூனியர் டாக்டர்ஸ் நெட்வொர்க்கின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் துருவ் சவுகான் கூறும்போது, ''இந்தியாவில் பரவி வரும் கொரோனா திரிபான ஓமிக்ரான் பரம்பரையின் வழித்தோன்றலான ஜே.என் 1 திரிபு குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை. இது ஒரு ஆபத்தான திரிபு அல்ல. மேலும் கை சுகாதாரத்தை பேணுதல், மருத்துவமனைகள் அல்லது நெரிசலான இடங்கள் போன்ற தேவையான இடங்களில் முகமூடிகளை அணிதல் மற்றும் சுவாச சுகாதாரத்தை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது எப்போதும் நல்லது. உங்களது அறிகுறிகளை ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வதும் முக்கியம்." என்று டாக்டர் துருவ் சவுகான் கூறினார்.

பீதி உதவாது.. விழிப்புணர்வு மட்டுமே உதவும்:

உள் மருத்துவ நிபுணர் டாக்டர் நிஹால் சிங் கூறும்போது, ''பொதுவாகவே பீதி மற்றும் குழப்பம் நோயைவிட அதிகமான உடல்நல பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஜே.என் 1 திரிபு பரவி வரும் நிலையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது கடுமையான நோயை ஏற்படுத்தும் அறிகுறிகளை காட்டவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பீதி உதவாது, விழிப்புணர்வு மட்டுமே உதவுகிறது. பயப்பட வேண்டிய அவசியமில்லை. நியாயமான முன்னெச்சரிக்கைகள் மட்டுமே தேவை." என்று டாக்டர் நிஹால் சிங் கூறினார்.

பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?

சர் கங்காராம் மருத்துவமனையின் இணை ஆலோசகர் டாக்டர் அவிரல் மாத்தூர் கூறும்போது, "இந்த திரிபு மிகவும் பரவக்கூடியது. இருப்பினும் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானதாகவே இருக்கின்றன. ஆனாலும் கூட, தடுப்பு முக்கியமானது. பொதுமக்கள் நெரிசலான அல்லது மூடப்பட்ட இடங்களில் முகமூடிகளை அணியவும், கை சுகாதாரத்தை கடைபிடிக்கவும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்கிறோம். பூஸ்டர் டோஸ்கள் உள்ளிட்ட உங்களுடைய தடுப்பூசிகள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்." என்று டாக்டர் அவிரல் மாத்தூர் கூறினார். இதன் மூலம் கொரோனா ஜே.என் 1 திரிபு ஆபத்தானது இல்லை என்றாலும் எளிய தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது தான் சுகாதார நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.