ETV Bharat / bharat

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு! மோதலுக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்! - MONSOON SESSION OF PARLIAMENT

எந்த அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது? யார் அறிவுறுத்தலின்படி தாக்குதல் நிறுத்தப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப அதிக வாய்ப்புள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Image credits-Sansad TV)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 4, 2025 at 2:39 PM IST

1 Min Read

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, பல மசோதாக்கள் போதிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினார்கள். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடர் கடந்த கூட்டத் தொடரை விட மத்திய அரசுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என கருதப்பட்டுகிறது. குறிப்பாக பெஹல்காம் தாக்குல் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக எந்த அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது? யார் சொல்லி தாக்குதல் நிறுத்தப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப அதிக வாய்ப்புள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த மாதம் வலியுறுத்திய நிலையில், தற்போது மழைக்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.