ETV Bharat / bharat

அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் என்னவெல்லாம் செய்தது தெரியுமா? - ரகசியத்தை உடைத்த பிரதமர் மோடி! - WHAT CONGRESS DID AGAINST AMBEDKAR

ஹரியானா மாநிலம் ஹிசார்- உபி அயோத்தியா இடையேயான விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 14, 2025 at 8:08 PM IST

2 Min Read

ஹிசார்: காங்கிரஸ் ஆட்சியின்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர் என்று பிரதமர் நரேந்திரமோடி விமர்சனம் செய்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ராசென் விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஹிசார்-அயோத்தியா இடையே முதல் வணிக விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விமான நிலையத்துக்கான புதிய முனைய கட்டடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை அழிக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. அம்பேத்கர் சம உரிமையை கொண்டு வர விரும்பினார். ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் வாக்கு வங்கி எனும் வைரஸை பரப்பி விட்டது. காங்கிரஸ் கட்சியானது தாழ்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி விட்டது. அதிகாரத்தை பெறுவதற்கான ஆயுதமாக பயன்படுத்துவதற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் மத ரீதியாக மாற்றி விட்டது. வாக்கு வங்கி எனும் வைரஸை பரப்பி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது, கட்சித் தலைவர்களின் நீச்சல் குளங்களுக்குத்தான் தண்ணீர் சென்றது. குடிநீர் குழாய்கள் மூலம் கிராமங்களைச் சென்றடையவில்லை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனபோதும் கூட கிராமங்களில் உள்ள 16 சதவிகித குடியிருப்புகள்தான் குடிநீரைப் பெறுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது தாழ்தப்பட்டோர், பழங்குடியினர், இதரப் பிற்படுத்தப்பட்டோர்கள்தான். சமூகத்தில் பின்தங்கியோரின் நலனைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கவலைப்படுவதாக இருந்தால், இப்போது ஒவ்வொரு தெருவிலும் பேசும் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது தாழ்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்வதை உறுதி செய்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: ''என்னோட ஸ்டைல் வேற மாதிரி'' - புதிர் போடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்!

அவர்கள் அம்பேத்கருக்கு என்னவெல்லாம் செய்தனர் என்பதை நாம் மறக்க முடியாது. அம்பேத்கர் உயிரோடு இருந்தபோது தேர்தல்களில் இரண்டு முறை அவரை தோல்வியடைய செய்து அவரை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. அரசியலில் இருந்தே அவரை வெளியேற்ற ஒரு சதித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அம்பேத்கர் உயிரோடு இல்லாத சூழலில், அவரது நினைவுகளை அழிப்பதற்கு கூட காங்கிரஸ் முயற்சி செய்தது. அவருடைய யோசனைகளைக் கூட முடிவுக்கு கொண்டு வர அவர்கள் விரும்பினர். பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒருபுறம் இணைப்பை மேற்கொண்டு வருகிறது. இன்னொரு புறம் ஏழைகளின் நலனுக்கான சமூக நீதியை உறுதி செய்கிறது. இதுதான் அம்பேத்கரின் கனவாக இருந்தது. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், இந்த தேசத்துக்காக தியாகம் செய்தவர்கள் நமது நாட்டுக்கான விருப்பமாக கொண்டிருந்தனர். இதுதான் அவர்களின் கனவாக இருந்தது.

இடைநிறுத்தம் இல்லாத வளர்ச்சி, முன்னேற்றம் என்பதுதான் பாஜகவின் மந்திரமாகும். ஏழைகள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதே எங்கள் நோக்கம். நமது அரசின் ஒவ்வொரு முடிவு, கொள்கை என்பது அம்பேத்கருக்கு கடமைப் பட்டிருக்கிறது. அம்பேத்கர், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா கொடுக்கப்படவில்லை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

கர்நாடாவில் உள்ள காங்கிரஸ் அரசு மத ரீதியிலான இட ஒதுக்கீடை வழங்குகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கியோரின் உரிமைகளைப் பறிக்கிறது. மத ரீதியிலான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் தடை இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்,"என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.