டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாகவும் விளங்கி வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், ஆக்ராவில் வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறைந்தது 54 ஏர் கூலர்களை நிறுவி, சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் விநியோகத்தை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த வகையில், சுமார் ஏழு அடியில் வளாகம் முழுவதும் ஏர் கூலர்கள் நிறுவப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து தாஜ்மஹாலின் மூத்த பாதுகாப்பு அதிகாரி பிரின்ஸ் வாஜ்பாய் கூறுகையில், "குளிரூட்டி காற்றாடிகளின் விலை சுமார் ரூ.25 லட்சம் ஆகும். அவை அனைத்தும் டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கூலர் பேன்கள் அனைத்தும் தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெப்பத்தைச் சமாளிக்க உதவும் வகையில், வளாகத்தின் பல்வேறு பகுதிகள் நிறுவப்பட்டுள்ளது. கூலர்ஸ் பேன் எனப்படும் இந்த குளிரூட்டி காற்றாடிகள் 15 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது,

- கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயிலில் உள்ள முன்பதிவு கவுண்டர்கள்
- நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில்கள் (Entry and exit gates)
- பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் (Security checking points)
- ராயல் கேட் அருகே உள்ள அரங்கங்கள் (Halls)
- டிக்கெட் ஜன்னல்கள் மற்றும் மக்கள் அதிகமாக சேரும் குவிமாடம் போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் நுழைவு பகுதிகள், போக்குவரத்து மற்றும் காத்திருப்பு பகுதிகள், குறிப்பாக நீண்ட வரிசைகள் காணப்படும் பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நிவாரணம் வழங்குவது போன்றதாகும். இதற்காக, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 11 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீரைப் பயன்படுத்துகின்றோம். இதற்கு தண்ணீர் விநியோகம் செய்ய ஒரு அமைப்பையும் ஏற்பாடு செய்துள்ளோம்," என்றார்.

இதையும் படிங்க: Summer Special Trains: ''தென்மாவட்டங்களுக்கு போறீங்களா?'' - சிறப்பு ரயில்கள் லிஸ்ட் பாருங்க! |
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தாஜ்மஹாலின் பளிங்கு கற்கள் மிகவும் சூடானதாக மாறுகின்றது. அதனால், சுற்றுலாப் பயணிகள் வளாகத்திற்குள் அதிக நேரம் செலவிட முடியால் போகிறது. ஆகையால் நீரிழப்பை (dehydration) தடுக்க நினைவுச் சின்னத்தைச் சுற்றியும் 25 ஆர்ஓ (RO) நிறுவப்பட்டு, சுத்தமாகக் குடிநீர் வசதி வழங்கப்படுவதை ஏஎஸ்ஐ (ASI) உறுதி செய்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ஆர்ஓ குடிநீர் விநியோகம் கடந்த ஆண்டு 6,000 லிட்டர் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அது 9000 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது குறித்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கூறுகையில், "தாஜ் மஹாலில் பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த குடிநீர் விநியோகம் மற்றும் ஏர் கூலர்கள் நிறுவப்பட்டுள்ளது. இது கோடைக்காலத்தில் வருபவர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது," எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மார்ட்டினும், அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, "இங்கே வெப்ப அலை அதிகமாக உள்ளது. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த ஏர் கூலர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," எனக் கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.
