ETV Bharat / bharat

என்ன கொடுமை சார் இது!.."ஒரு டீயின் விலை 340 ரூபாயா?" - ப.சிதம்பரம் ட்வீட்! - rs 340 tea at kolkata airport

கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு கப் டீ 340 ரூபாய்க்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் தமது எக்ஸ் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 10:58 PM IST

ப.சிதம்பரம் -கோப்புப்படம்
ப.சிதம்பரம் -கோப்புப்படம் (Image Credits - ANI)

ஹைதராபாத்: கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு கப் டீ 340 ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ு('The Coffee Bean and Tea Leaf') சூடுநீரும், தேயிலை தூள் பையும் அடங்கிய ஒரு கப் டீ 340 ரூபாய்க்கு விற்கப்படுவதை இன்று தான் அறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், " சில ஆண்டுகளுக்கு முன், இதேபோன்று சூடுநீரும், தேயிலை பையும் அடங்கிய ஒரு கப் டீ, சென்னை விமான நிலையத்தில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறித்து ட்வீட் செய்திருந்தேன். அந்த பதிவிற்கு பிறகு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்தது" என்றும் ப.சிதம்பரம் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வருவது எப்போது?

"கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கப்படும் டீயின் விலையை பார்க்கும்போது, தமிழ்நாட்டை விட மேற்கு வங்கம் மாநிலத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது அப்பட்டமாக தெரிகிறது" எனவும் தமது பதிவில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு பணவீக்கம் எனப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.