லாசா: திபெத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையே அமைந்துள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியம்தான் திபெத். இமயமலை பகுதியில் அமைந்துள்ள திபெத்தில், அவ்வப்போது பயங்கர நிலநடுக்கம், பனிச்சரிவு போன்ற பேரிடர்கள் நிகழ்வது உண்டு.
அந்த வகையில், இன்று (மே 12) அதிகாலை 2.40 மணியளவில் திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பேரிடர் மீட்புப் படைகள் அங்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. திபெத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் லேசாக உணரப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: "கருணாநிதி இருந்தால் 'இதை' முடித்திருப்பார்.. ஸ்டாலினுக்கு மனம் இல்லை" - அன்புமணி ஓபன் டாக்! |
ஏற்கனவே கடந்த ஜனவரி 7ஆம் தேதி திபெத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய பிராந்தியங்களில், குறிப்பாக இமயமலை தொடர் பகுதிகளில் சமீபகாலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின்றன. அதேபோல, ஆப்கானிஸ்தானிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.